பேரணிக்கு முன்பாக கைத்துப்பாக்கியுடன் வந்த ஒரு நபர், திடீரென மாணவர்களுக்கு எதிராக கோஷம் எழுப்பினார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டு வருகிறது. விரைவில் சட்டம் அமலுக்கு வரும் என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறியுள்ளார். மேற்கு வங்கத்தில் ஏப்ரல்-மே மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
சிஏஏ, என்பிஆர் வாபஸ் பெறாதவரை மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ஒத்துழைக்க வேண்டாம் என்று போராட்டம் நடத்தும் முஸ்லிம்களிடம் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
ஊழல், லஞ்சப் புகார்களால் சிறைக்குப் போக வேண்டியிருக்கும் என்று அதிமுக ஆட்சியாளர்கள் பயப்படுவதால், என்.பி.ஆரை எதிர்த்து சட்டசபையில் தீர்மானம் போட மறுக்கிறார்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
பாஜக கூட்டணிக் கட்சிகள் ஆளும் பீகார், தெலுங்கானா, ஆந்திரா போன்ற மாநிலங்களின் சட்டமன்றங்களில் என்பிஆருக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில், தமிழக அரசு என்பிஆர் விவகாரத்தில் அடாவடித்தனமாகச் செயல்படுவது கண்டிக்கத்தக்கது என்று வி.எம்.எஸ்.முஸ்தபா கூறியுள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போலீஸ் அனுமதியின்றி போராட்டம் நடத்துபவர்களைக் கைது செய்து அகற்றுமாறு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி கலவரத்தால் ஏற்பட்ட கவலையால், ஹோலி பண்டிகை கொண்டாடப் போவதில்லை என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
டெல்லி கலவரம் குறித்து சுப்ரீம் கோர்ட் மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டுமென்று வலியுறுத்தி திரிபுராவில் மார்க்சிஸ்ட் கட்சியினர் பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
டெல்லி கலவரங்கள் மற்றும் நாட்டில் சுமுக நிலை ஏற்படுத்துவது குறித்தும் அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டி, பிரதமர் ஆலோசிக்க வேண்டுமென்று மூத்த குடிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு(சிஏஏ) எதிராக டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருக்கிறது. இதற்கு இந்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.