தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை துவங்க தாமதமாகும் . , அடுத்த 48 மணி நேரத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தாமதமாகத் துவங்க வாய்ப்பு உள்ளது எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் இன்று மாலை காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பிருப்பதால் அடுத்து வரும் நாட்களில் வட மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும் . அடுத்த 48 மணி நேரத்தில் 21 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் , வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், கரூர், நாமக்கல், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கடலூர், அரியலூர் மற்றும் புதுவை பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், நாகை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் சிவகாசி 7 செ.மீ மழையும், மலையூர் 6 7 செ.மீ மழையும், திருமயம் 5 7 செ.மீ மழையும், குடுமியான்மலை, கலெக்டர் ஆபிஸ், திருப்பூர் 4 7 செ.மீ மழையும், மானாமதுரை, ஆவுடையார்கோயில், மேட்டுப்பட்டி, திருப்பத்தூர், திருவுனம், பொன்னேரி, திருப்பட்டூர், நாட்றம்பள்ளி, அன்னவாசல் தலா 3 செ.மீ மழையும், பெய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.