வடகிழக்கு பருவமழை வரும் 28ம் தேதி தொடங்க வாய்ப்பு...!

The northeast monsoon is likely to start on the 28th.

by Balaji, Oct 23, 2020, 18:21 PM IST

இம்மாதம் வரும் 28ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் த தொடர்ச்சியாக அக்டோபர் 3ம் வாரம் வடகிழக்கு பருவ மழை தொடங்கும் என்று தெரிகிறது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது : வரும் 28ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது. இந்த ஆண்டு வட தமிழகத்தில் இயல்பை ஒட்டியே மழை இருக்கும். தென் தமிழகத்தில் இயல்பை விட மழை குறைவாக இருக்கும். வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் முடிந்ததும் வடகிழக்கு பருவமழை தொடங்கும். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்து வரும் 2 நாட்களுக்கு வட தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றார். .

More Chennai News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை