திரும்ப கொடுக்க வேண்டிய கடமை... ஷேன் வாட்சன்!

shane watson says we do out best for upcoming games

by Sasitharan, Oct 23, 2020, 18:10 PM IST

ஐபிஎல் கிரிக்கெட்டில் இந்த ஆண்டு ஆரம்பத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பல சிக்கல்களை சந்தித்து ஆரம்பித்தது. எனினும் தற்போதும் சோகமான நிலையில் ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த ஆண்டு பிளே ஆஃப் சுற்றுக்கு சென்னை அணி தகுதி பெறுமா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் 3 இல் மட்டுமே வெற்றி. இதனால் சென்னை அணியின் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பு முடிந்துவிட்டது என்று கூறும் அளவுக்கு இருக்கிறது.

எனினும் மீதமுள்ள 4 போட்டிகளில் மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வென்று, மற்ற அணிகளின் வெற்றிகளில் மாற்றம் ஏற்பட்டால், சென்னை அணிக்கு வாய்ப்பு இருக்கிறது எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே, இன்னும் சில மணி நேரத்தில் ஷார்ஜாவில் சென்னை - மும்பை அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் சென்னை வென்றால் பிளே ஆஃப் சுற்று செல்லும் இன்னும் வாய்ப்பு இருக்கிறது. தோல்வி அடைந்தால் கோப்பை கனவு அவ்வளவுதான்.

இதற்கிடையே, ஷேன் வாட்சன் பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அதில், ``வரும் 4 போட்டிகளில் எங்கள் வீரர்கள் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிப் பெற வேண்டும். அப்படியான வெற்றிக்கு, அசாதாரனமான திறமையை வெளிப்படுத்த வேண்டும். அடுத்த 4 போட்டிகளில் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம். சென்னை அணியின் ரசிகர்கள் எப்போதும் எங்களுக்கு நிபந்தனையில்லா அன்பை கொடுத்து வருகின்றனர். ரசிகர்கள் செலுத்திய அன்புக்கு திரும்ப கொடுக்க வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது" எனக் கூறியுள்ளார்.

More Sports News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அதிகம் படித்தவை