10 ரூபாய் டாக்டர் கோபாலன் மரணம் – சோகத்தில் வடசென்னை மக்கள்

by Sasitharan, Apr 10, 2021, 11:26 AM IST

சென்னையில் 10 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து வந்த மருத்துவர் மரணம்

வண்ணாரப்பேட்டையில் 10 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து வந்த மருத்துவர் கோபாலன் உயிரிழந்தார்.

மன்னார்குடியை சேர்ந்தவர் கோபாலன், கடந்த 1966-ம் ஆண்டு தஞ்சை மருத்துவ கல்லூரியில் படிப்பை முடித்துவிட்டு சென்னை வந்தார். சென்னை மருத்துவ கல்லூரியில் மருத்துவ உயர்படிப்பான MS பயின்றார்.

இதையடுத்து, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையிலும், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையிலும் பணியாற்றினார். அதனைத் தொடர்ந்து 2002 இல் மின்டில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

1969-ம் ஆண்டு முதல் சென்னை வண்ணாரப்பேட்டையில் கிளினிக் ஒன்றை வைத்து, 2 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து வந்தார். 1976-ம் ஆண்டு முதல் 2 ரூபாயில் இருந்து 5 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்தார். பின்னர் மக்களாகவே சில்லரை தட்டுப்பாடு காரணமாக 10 ரூபாய் கொடுத்து மருத்துவம் பார்த்தனர். இவருக்கு 10 ரூபாய் டாக்டர் என்ற அடைமொழி உண்டாது.

மனைவியை இழந்த நிலையில் தனியாக வசித்து வந்த மருத்துவர் கோபாலன், உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 77.

10 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து வந்த மருத்துவர் கோபாலனும் மறைந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

You'r reading 10 ரூபாய் டாக்டர் கோபாலன் மரணம் – சோகத்தில் வடசென்னை மக்கள் Originally posted on The Subeditor Tamil

More Chennai News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை