வாங்க மச்சான் வாங்க.. வந்தா ராஜாவாதான் வருவேன் 2வது சிங்கிள் டிராக்

Vandha Rahavadhan Varuven movie 2nd single track

by Isaivaani, Jan 22, 2019, 20:11 PM IST

வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தோட இரண்டாவது சிங்கிள் டிராக் நாளை வெளியிடப்படுகிறது.

சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு, மேகா ஆகாஷ், கேத்ரின் தெரசா, பிரபு, ரம்யா கிருஷ்ணன், நாசர், யோகிபாபு, ரோபோ ஷங்கர், மொட்டை ராஜேந்தர் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள படம் வந்தா ராஜாவாதான் வருவேன்.

இந்த படம் பொங்களை முன்னிட்டு, பேட்ட மற்றும் விஸ்வாசத்திற்கு போட்டியாக ரிலீஸ் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் வந்தா ராஜாவாகதான் வருவேன் வரும் பிப்ரவரி மாதம் 1ம் தேதி ரிலீஸ் செய்யப்படுகிறது.

லைகா தயாரிக்கும் இந்த படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.
ஏற்கனவே படத்தின் டீசர் மற்றும் ரெட் கார்டு என்ற முதல் சிங்கிள் டிராக் பாடல் கடந்த 5 நாட்களுக்கு முன்பு ரிலீஸ் ஆனது.

இந்நிலையில், நாளை மாலை 5 மணிக்கு வாங்க மச்சான் வாங்க என்ற இரண்டாவது சிங்கிள் டிராக் ரிலீஸ் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

You'r reading வாங்க மச்சான் வாங்க.. வந்தா ராஜாவாதான் வருவேன் 2வது சிங்கிள் டிராக் Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை