ஹரிஷ் கல்யாண் நடித்து விரைவில் வெளிவர இருக்கும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தின் 2வது சிங்கிள் டிராக் பாடல் நாளை ரிலீஸ் செய்யப்படுகிறது.
ரஞ்ஜித் ஜெயகொடி இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண் மற்றும் ஷில்பா மஞ்சுநாத் நடித்து வரும் படம் இஸ்பதே ராஜாவும் இதய ராணியும். ரொமாண்டிக் காமெடி படமாக உருவாகி வரும் இந்தபடத்தில் மா.கா.பா ஆனந்த் மற்றும் பால சரவணன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.
சாம் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் முதல் சிங்கிள் டிராக் ஏற்கனவே வெளியாகிய நிலையில் ஏய் கடவுளே என்ற 2வது சிங்கிள் ட்ராக் நாளை மாலை 6 மணிக்கு ரிலீஸ் செய்யப்படுகிறது.
இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முதன்முதலாக பாடகராக அவதாரம் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.