நட்பே துணை.. ஹிப்ஹாப் தமிழாவின் சிங்கிள் பசங்க இதோ..

ஹிப்ஹாப் தமிழா ஆதியின் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் நட்பே துணை படத்தில் இருந்து சிங்கிள் பசங்க என்ற பாடல் இன்று ரிலீஸ் செய்யப்பட்டது.

பார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில் ஹாக்கி விளையாட்டில் கதைக்களத்தில் உருவாகி வரும் படம் நட்பே துணை. ஹிப் ஹாப் தமிழா ஆதி ஹீரோவாக நடிக்கிறார். இவரைத் தவிர இயக்குனர் கரு பழனியப்பன் மற்றும் பாண்டியராஜன், நடிகர் ஹரிஷ் உத்தமன், விக்னேஷ் காந்த், 'எருமை சாணி 'விஜய், அஜய் கோஸ், சுட்டி அரவிந்த், 'புட் சட்னி' ராஜ்மோகன், பிஜிலி ரமேஷ், பழைய ஜோக் தங்கதுரை, அஸ்வின் ஜெரோம் ஆகியோர் நடித்துள்ளனர்.

சுந்தர்சி தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். இந்த படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நட்பை துணை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் ரிலீஸ் ஆன நிலையில் இன்று அந்த படத்தில் இருந்து 'சிங்கிள் பசங்க' என்ற பாடல் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

ஹிப்ஹாப் தமிழா ஆதியின் சிங்கிள் பசங்க பாடல் இதோ..

READ MORE ABOUT :