இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்.. இசை வெளியீடு

Ispade Rajavum Idhaya Raniyum Movie Music release

by Isaivaani, Jan 27, 2019, 09:08 AM IST

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தின் இசை நேற்று வெளியிடப்பட்டது.

ரஞ்ஜித் ஜெயக்கொடி இயக்கத்தை ஹரிஷ் கல்யாண் மற்றும் ஷில்பா மஞ்சுநாத் நடித்து வரும் படம் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும். ரொமான்டிக் காமெடி படமாக உருவாகி வரும் இந்த படத்தில் மாகாபா ஆனந்த் மற்றும் பால சரவணன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

இந்த படத்திற்கு சாம் இசையமைத்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் முதல் மற்றும் இரண்டாவது சிங்கிள் ட்ராக் சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில் விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான சூப்பர் சிங்கரில் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கண்ணம்மா.., என் கடவுளே.., சண்டாளி.., ஏண்டி ராசாத்தி.., ஏனோ பெண்ணே.., ஆகிய ஐந்து பாடல்கள் ரிலீஸ் செய்யப்பட்டது.

You'r reading இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்.. இசை வெளியீடு Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை