கார்த்தியின் தேவ் ட்ரைலர் நாளை ரிலீஸ்

Karthi in Dev Movie trailer release

by Isaivaani, Jan 30, 2019, 10:52 AM IST

கார்த்தியின் 17 வது படமான தேவ் படத்தின் டிரைலர் நாளை ரிலீஸ் செய்யப்படுகிறது.

ராஜா ரவிசங்கர் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிக்கும் படம் தேவ். இந்த படத்தில் ரகுல் பிரீத் சிங் கார்த்திக்கு ஜோடியாக நடிக்கிறார். இவர்களை தவிர, பிரகாஷ்ராஜ் வம்சி கிருஷ்ணா ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன், அட்வென்ச்சர் திரில்லர் கதை களத்தில் சுமார் 50 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு உள்ளது. படம் வரும் பிப்ரவரி மாதம் 14ம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்படுவதாக அறிவித்துள்ளனர். இந்த படத்திற்கு சென்சார் போர்டு சான்றிதழ் வழங்கியது.
இந்நிலையில் படத்தின் டிரைலர் நாளை ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

You'r reading கார்த்தியின் தேவ் ட்ரைலர் நாளை ரிலீஸ் Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை