இந்தியாவின் முதல் ஒட்டக சினிமா - விக்ராந்தின்

ஆரம்பத்தில் நாயகனாக அறிமுகமாகி பின்னர் குணசித்திர நடிகர், வில்லன் அவதாரம் எடுத்தவர் நடிகர் விஜய்யின் உறவினர் விக்ராந்த். நீண்ட காலமாக சினிமாவில் வெற்றி பெற போராடிக்கொண்டு இருக்கிறார். அவருக்கு இப்போது தான் நல்ல காலம் பிறந்துள்ளது. அதன்படி சமுத்திரகனி உடன் தொண்டன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர் தற்போது சுசீந்திரன் உடன் சுட்டுபிடிக்க உத்தரவு போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.

Bakridmovie Teaser

இதற்கிடையே கொரில்லா, மான்ஸ்டர், வாட்ச்மேன் என தமிழ் சினிமாவில் படையெடுக்க ஆரம்பித்துள்ள அனிமல் ஜானர் படங்கள் வரிசையில் விக்ராந்த் நாயகனாக நடிக்கும் படம் `பக்ரீத்'. இயக்குநர் ஜக்தீச சுபு இயக்க நாயகியாக வசுந்தரா காஷ்யப் நடிக்கிறார். இந்தியத் திரைப்பட வரலாற்றில் முதன்முறையாக ஒட்டகம் `சாலா’ நடித்திருக்கும் திரைப்படமாக இது உருவாகியுள்ளது. இமான் இசை அமைத்துள்ளார்.

BakridMovieTeaser

இந்தப் படத்தின் டீசரை அட்லீ, ஆர்யா, ஏ.ஆர். முருகதாஸ், விஷ்ணு விஷால், விஜய் சேதுபதி, அனிருத் ஆகியோர் ட்விட்டரில் ரிலீஸ் செய்தனர். இது தற்போது நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

 

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

Recent News