`20 நாட்கள் கால்ஷீட்; மோகன்லால் செட்டுக்கு சர்ப்ரைஸ் விசிட்' - அமர்க்களத்துடன் ஆரம்பமான `தல 59' ஷூட்!

`விஸ்வாசம்' படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு நடிகர் அஜித் தற்போது `தீரன் அதிகாரம்' ஒன்று இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் இந்தியில் ஹிட் அடித்த 'பிங்க்' ரீமேக் எனக் கூறப்படுகிறது. இந்தப் படத்தின் மூலமாக வித்யா பாலன் தமிழில் முதல்முறையாக அறிமுகமாகிறார். இந்தப் படத்துக்காக அஜித் 20 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. படத்தை ஒரே ஷெட்யூலில் முடித்து வரும் மே மாதம் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

`விஸ்வாசம்' படத்தை போலவே இந்தப் படத்தின் படப்பிடிப்பும் ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நேற்று முதல் தொடங்கியுள்ளது. இதில் கலந்துகொள்வதற்காக அஜித் விமானத்தில் சென்ற புகைப்படங்கள் வைரலாகின. ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் இயக்குனர் பிரியதர்சன் இயக்கத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், நடிகர் அர்ஜுன் நடித்து வரும் `மரைக்கார் அரபிக்கடலிண்டே சிம்ஹம்' படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதனை அறிந்த தல அஜித் மோகன்லால் படப்பிடிப்புக்கு திடீர் விசிட் அடித்துள்ளார்.

அங்கு இயக்குனர் பிரியதர்ஷனை சந்தித்து, சிறிது நேரம் உரையாடிவிட்டு, தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார் அஜித். இருப்பினும் அங்கு மோகனலால் இல்லாததால் அவரை சந்திக்கவில்லை. இருப்பினும் அஜித்தின் சர்ப்ரைஸ் விசிட்டால் ஆச்சரியமடைந்த படக்குழுவினர் அவருடன் போட்டி போட்டு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS
Advertisement
மேலும் செய்திகள்
Nayanathara-s-kolaiyuthir-kaalam-again-postponed
நாளைக்கும் நயன்தாரா படம் ரிலீஸ் இல்லை?
Actor-Kathir-finished-his-portion-in-Bigil-Movie
பிகில் படத்தில் தனது போர்ஷனை முடித்த கதிர்!
Tamilnadu-brahmin-association-condemns-commedy-actor-santhanam-for-defaming-brahmin-community-in-A1-cinema
சந்தானம் நடித்த ஏ1 படத்தை யாரும் பார்க்காதீர்கள்... பிராமணர் சங்கம் வேண்டுகோள்
We-do-not-freedom-speech-express-good-opinions-Film-director-SA-Chandra-Sekar
நல்ல கருத்துகளையும் கூற முடியவில்லை; பேச்சு சுதந்திரமும் இல்லை - இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் வேதனை
vickram-enjoyed-on-watching-Kadaram-kondan-in-kasi-theatre-with-fans
கடாரம் கொண்டான் ரிலீஸ், தியேட்டருக்கு வந்த விக்ரம்; ரசிகர்கள் ஆரவாரம்
Tanjore-Tamil-girl-mastered-in-Rap-Music-world
ராப் இசையில் கலக்கும் தஞ்சாவூர் பொண்ணு ஐக்கி பெர்ரி!
Bigil-Song-Leaked-and-goes-viral-movie-crew-was-shocked
லீக்கானது பிகில் பட பாட்டு; அப்செட்டில் விஜய், ஏ.ஆர். ரஹ்மான்!
Man-arrested-for-harrassing-Bengali-actress-Arunima-Ghosh-on-social-media
பிரபல வங்காள நடிகைக்கு சமூக வலைதளம் மூலம் 'பாலியல் தொல்லை'! மர்ம நபர் கைது
Kangana-Sister-blame-Tapsee-directly-and-a-cold-war-started-in-bollywood
பாலிவுட்டில் டாப்ஸி கிடு கிடு வளர்ச்சி; கடுப்பில் கங்கனா குடும்பம்!
Three-Bollywood-Actors-play-villain-role-against-Super-star-Rajinikanth
ரஜினியுடன் மோதும் 3 பாலிவுட் நடிகர்கள்!
Tag Clouds