`என் தோழியே என்னை ஏமாற்றிவிட்டாள்' - காதல் தோல்வியால் வருந்தும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது காதல் அனுபவங்கள் குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் தற்போதுள்ள சூழ்நிலையில் நன்றாக நடித்து பெயர் வாங்கும் நடிகைகளில் முக்கியமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பொண்ணு தோற்றத்தில் இருப்பதால் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை சம்பாதித்து வைத்துள்ளார். தொடர்ச்சியாக நல்ல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் திரைக்கு வந்த `கனா' படத்தில் இவர் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. இந்தப் படத்துக்கு பிறகு கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்கள் அவருக்கு கிடைத்து வருகிறது. இந்நிலையில் காதல் குறித்து சமீபத்தில் பேசியுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

இது குறித்து தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேசிய அவர், ``என்னை பொறுத்தவரை காதல் என்பது எனக்கு அதிர்ஷ்டமில்லாத ஒன்றாக போய்விட்டது. காரணம் 12ம் வகுப்பிலேயே எனக்கு முதல் காதல் தோல்வி ஏற்பட்டுவிட்டது. என் காதலனுடன் சேர்ந்துகொண்டு என் தோழியே என்னை ஏமாற்றிவிட்டார். அதேபோல் சில ஆண்டுகளுக்கு முன் வேறு ஒரு ரிலே‌ஷன்ஷிப்பில் இருந்தேன். ஆனால் அதிலும் அதிர்ஷ்டம் இல்லை. ஆம், அந்த உறவில் இருந்து பிரிய வேண்டியதாகிவிட்டது. அதனால் இப்போது சிங்கிளாக தான் இருக்கிறேன்.

நான் மிகவும் உணர்ச்சிபூர்வமானவள். என்னைப் பொறுத்தவரை காதல் செய்யும் போது அது முறிந்துவிடக்கூடாது என விரும்புவேன். ஆனால் என் நேரம். என் காதல் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்துவிட்டது. அதனால் இப்போது படம் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன். காதல் என்பது அவசியமான ஒன்றாகவே பார்க்கிறேன். ஆனால் ஒரு நடிகையாக இருந்து கொண்டு காதலிப்பது கடினமான விஷயம் தான். இருப்பினும் எனக்கு ஒரு நல்ல காதலர் கிடைப்பார் என்று காத்துக்கொண்டிருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

 

`கண்டிப்பா லவ் மேரேஜ் தான் பாஸ்' - நடிகர் ஜெய் குஷி!

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

மேலும் செய்திகள்