என்னது ஐஸ்வர்யா ராஜேஷ் இன்னும் வயசுக்கு வரலையா? – கனா ஸ்நீக் பீக் ரிலீஸ்!

Dec 17, 2018, 19:59 PM IST

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ள கனா படத்தின் புதிய ஸ்நீக் பீக் ரிலீசாகி வைரலாகி வருகிறது.

சின்னத்திரையில் தொடங்கி வெள்ளித்திரை நாயகனாக ஜொலிக்கும் இளம் நாயகன் சிவகார்த்திகேயன் தயாரிக்கும் முதல் திரைப்படம் கனா.

சிவகார்த்திகேயனின் நண்பரும் பன்முக கலைஞருமான நம்ம நெருப்பு குமார், கபாலி படத்தின் நெருப்புடா பாடலை பாடிய அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கனா படம் வரும் டிசம்பர் 21ம் தேதி பல முனை போட்டியுடன் வெளியாகிறது.

பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்தி இந்திய அளவில் எடுக்கப்பட்ட இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். சத்யராஜ், ஐஸ்வர்யாவின் தந்தையாக நடித்துள்ளார்.

தமிழில் ஒரு தங்கல் படம் போல இந்த படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் காட்சிகளும், ரசிக்கும் படியும், நேர்த்தியான தரத்திலும் எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள படத்தின் 2 நிமிட ஸ்நீக் பீக்கில், ஆண்களுடன் கிரிக்கெட் பயிற்சி செய்வதாக, தூக்கத்தில் தனது தாயிடம் ஐஸ்வர்யா ராஜேஷ் உளறுகிறார். அவரை அடிக்க துரத்தும் அம்மாவிடம் இருந்து அப்பா சத்யராஜ் காப்பாற்றும் காட்சி வெளியிடப்பட்டுள்ளது.

இந்த காட்சியில், ஐஸ்வர்யா ராஜேஷ் இன்னும் வயசுக்கு வரலை என சொல்வது தான் தற்போது மீம் க்ரியேட்டர்களின் தீணியாக மாறியுள்ளது. ஆனால், படத்தின் கதைப்படி அவருக்கு அந்த காட்சியில் 13 வயது என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a reply