முன்னாள் இந்திய ராணுவ கேப்டனின் பயோபிக்கில் நடிகர் சூர்யா

by Sakthi, Mar 5, 2019, 20:54 PM IST
Share Tweet Whatsapp
நடிகர் சூர்யாவிற்கு கடைசியாக வெளியான படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியானது. வெயிட்டிங்கில் இருக்கும் சூர்யா ரசிகர்களுக்காகவே இரண்டு பெரிய பட்ஜெட் படங்கள் தயாராகிவருகிறது. இந்நிலையில் சூர்யா - சுதா கொங்கரா கூட்டணியில் உருவாக இருக்கும் படம் பற்றிய சுவாரஸ்ய தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது. 
 
சூர்யா
 
 
சூர்யாவின் 38வது படத்தை இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கெங்கரா இயக்கவிருக்கிறார். ‘சூர்யா 38’ என அழைக்கப்படும் இந்த படத்தை ஆஸ்கர் வெற்று பெற்ற தயாரிப்பாளரான Guneet monga இணைந்து தயாரிக்கவிருக்கிறார். சூர்யா நடிக்கவிருக்கும் இது ஒரு பயோபிக் படமாம்.  இந்திய தொழிலதிபர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்று படத்தில் தான் நடிக்கவிருக்கிறார். இந்திய ராணுவத்தில் கேப்டனாக பணியாற்றி ஓய்வு பெற்ற கோபிநாத், பின்னாளில் ஏர்டெக்கன் என்கிற நிறுவனத்தை துவங்கி குறைந்த கட்டணத்தில் விமான சேவையை தந்தவர். அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. 
 
கோபிநாத்
 
தற்பொழுது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் மோகன்லால், ஆர்யாவுடன் காப்பான் படத்தில் நடித்துவருகிறார் சூர்யா. இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிந்த கையோடு சுதா படத்தில் நடிப்பார். அதுமட்டுமின்றி, செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அரசியல் திரைப்படமான NGKவும் ரிலீஸூக்கு தயாராகிவருவதும் குறிப்பிடத்தக்கது. 

Leave a reply