இந்த வீக் என்டில் வெளியாகும் 5 வித்தியாசமான படங்கள்

தினம் தினம்  பரபரப்பாக இயங்கும் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பெரும்பாலான மக்கள் வார இறுதி நாட்கள் வந்தாலே சினிமா, பீச், கோயில் என நேரத்தை  ஜாலியாக  செலவிடுகின்றனர். அது  மனச்சோர்வைப்  போக்கி அடுத்த வாரத்துக்கு  உழைக்க  உடலையும்  மனதையும்  தயார்  செய்ய  உதவியாக இருக்கிறது.

படங்கள்

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும்  சினிமா  பிரியர்களுக்குக்  கொண்டாட்டம் தான். இந்த வாரம் எந்த புதுப்படம் வெளியாகிறது என்னும் எதிர்பார்ப்புடன் காத்திருப்பார்கள். அப்படியானவர்களுக்கு  இந்த வெள்ளிக்கிழமை (7-3-2019) வெளியாகும் தமிழ் படங்களைப் பற்றிய தொகுப்பு இதோ.

அதர்வா நடிப்பில் உருவாகியிருக்கும் `பூமராங்’. இந்த திரைப்படம் சமூகப்  பிரச்சினைகள் பற்றி பேசும் படமாக உருவாகியுள்ளது. குறிப்பாக இந்தியாவில்  உள்ள நதிகளை  இணைப்பது என்ற  விவாதத்திற்குரிய ஒரு விஷயத்தைப் பற்றி பேசும் படம்

கதிர் நடிப்பில் உருவாகியிருக்கும் `சத்ரு’,  அவருக்கு  ஜோடியாகச் சிருஷ்டி  டாங்கே  நடித்திருக்கிறார்.  இது   ஆக்‌ஷன்  கலந்த  திரில்லர் படம். 24 மணி நேரத்தில் வில்லன்கள்  5  பேரையும்  காவல்துறை அதிகாரியாக வரும் கதிர் துரத்திப் பிடித்து  சட்டத்தின் முன்  நிறுத்துவதுதான்  சத்ரு. 

பரத் நடிப்பில் உருவாகியிருக்கும் `பொட்டு’ . இப்படத்தில் தம்பி ராமையா, பரணி, மொட்டை ராஜேந்திரன்,  ஊர்வசி என காமெடி பட்டாளமே  நடித்துள்ளது. பேய் படமான இதில் பரத் பெண் வேடத்தில் நடித்திருக்கிறார்.

இந்த மூன்று படங்களுடன் `கபிலவஸ்து’, `ஸ்பாட்’ ஆகிய படங்களும் வெளியாகின்றன.  

 

 

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

மேலும் செய்திகள்