இனிப்பான கேழ்வரகு புட்டு ரெசிபி

Ragi puttu recipe

by Isaivaani, Mar 7, 2019, 19:08 PM IST

உடல் வலிமைக்கு முக்கியத்துவம் தரும் கேழ்வரகு புட்டு எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.

தேவையானப் பொருட்கள் :

கேழ்வரகு மாவு - 1 கப்

சர்க்கரை - 1/4 கப்

தேங்காய்த்துருவல் - 1/2 கப்

ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்

நெய் - 2 முதல் 3 டீஸ்பூன் வரை

உப்பு - ஓரிரண்டு சிட்டிகை

செய்முறை :

முதலில், கேழ்வரகு மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அத்துடன் உப்பு, கொஞ்சம் தண்ணீர் சேர்த்து பிசையவும்.

மாவு கையில் பிடிக்கும்படியும், உதிரும்படியும் இருக்க வேண்டும்.

பின்னர், ஈரமான வெள்ளைத் துணியில், கேழ்வரகு மாவை போட்டு இட்லி தட்டின் மேல் வைத்து வேக விடவும். மாவு வெந்ததும், பாத்திரத்தில் போட்டு ஆற விடவும்.

அத்துடன், நெய், சர்க்கரை, தேங்காய்த்துருவல், ஏலக்காய்த்தூள் ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்க்வும்.

அவ்ளோதாங்க.. சுவையான கேழ்வரகு புட்டு ரெடி..!

You'r reading இனிப்பான கேழ்வரகு புட்டு ரெசிபி Originally posted on The Subeditor Tamil

More Ruchi corner News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை