இளையராஜாவின் ஜாதிப் பெயரை குறிப்பிட்டு செய்தி வெளியிட்டமைக்காக, பிரபல ஆங்கில நாளிதழான ‘தி இண்டியன் எக்ஸ்பிரஸ்’ மன்னிப்பு கோரியுள்ளது.
குடியரசுத் தினத்தை ஒட்டி இசைஞானி இளையராஜாவுக்கு பத்மவிபூஷன் விருது வழங்கப்பட்டதை செய்தியாக வெளியிட்ட பிரபல ஆங்கில நாளிதழான ‘நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ்’ அந்த தலைப்பில் அவரின் சாதியை குறிப்பிட்டுள்ளது.
அந்த செய்தியில், இளையராஜாவை தலித் என்றும், அவர் தலித் என்பதற்காகவே பத்மபூஷன் விருதிற்கு தேர்வு செய்யப்பட்டார் என்று செய்தி வெளியிட்டிருந்தது. இதனைக் கண்ட இசைஞானியின் ரசிகர்களும், திரைத்துறையினரும், அரசியல் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.
இதனைத்தொடர்ந்து இன்று நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் இளையராஜாவை சாதி ரீதியாக குறிப்பிட்டு செய்தி வெளியிட்டதற்கு மன்னிப்பு கேட்டும், வருத்தம் தெரிவித்தும் முதல் பக்கத்திலேயே செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.