மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்! - யுவன் இசை

Sivakarthikeyen new movie pooja

by Sakthi, Mar 13, 2019, 18:23 PM IST
மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டு, படமும் பூஜையுடன் இன்று தொடங்கியது. 
 
sivakarthikeyen
 
ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - நயன்தாரா நடிப்பில் தற்போது உருவாகியிவரும் படம் மிஸ்டர் லோக்கல். இப்படம் வருகிற மே 1ஆம் தேதி வெளியாக இருக்கிறது.  அடுத்ததாக, இன்றுநேற்றுநாளை ரவிக்குமார் இயக்கத்தில் பெரிய பட்ஜெட் படம் ஒன்றில் நடித்துவருகிறார். சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் பண்டியராஜ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
sivakarthikeyen
 
இந்நிலையில் இரும்புத்திரை இயக்குநர்  மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் புதிய படம் இன்று பூஜையுடன் தொடங்கியது. இப்படத்துக்கு ஹீரோ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தில் சிவாவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கவிருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜூன் மற்றும் நாச்சியார் நாயகி இவானாவும் முக்கிய ரோல்களில் நடிக்கவிருக்கிறார்கள். கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.  
 
மிஸ்டர் லோக்கல், ரவிக்குமார் படம், சன்பிக்சர்ஸூடன் படம் மற்றும் இறுதியாக ஹீரோ என சிவகார்த்திகேயன் ஒரே நேரத்தில் நான்கு படங்களில் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

You'r reading மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்! - யுவன் இசை Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை