நாளை ரிலீஸ் என்னென்ன படங்கள் தெரியுமா? நோட் பண்ணிக்கோங்க

வார இறுதி நாட்கள் வந்தாலே திரையுலகினருக்கும், சினிமா பிரியர்களுக்கும் கொண்டாட்டம் தான். வாரா வாரம் ஏதாவது புதுப்படங்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. அதுவும் தமிழ் சினிமாவில் இப்பொழுதெல்லாம் ஒரே நேரத்தில் பல படங்கள் ரிலீஸாகி ரசிகர்களை மிரளவைக்கிறது. இதற்கு காரணம் கோலிவுட்டில் அதிக படங்கள் எடுக்கப்படுகிறது என்பதே. உச்ச நடிகர்களின் படங்கள் வெளியாகாத நேரத்தில், சின்ன பட்ஜெட் படங்கள் கொத்து கொத்தாக வெளியாகிறது. சரி, இந்த வார இறுதியை வரவேற்கும் புதுப்படங்கள் என்னென்ன என்று இப்போ பார்க்கலாம்.

இஸ்பேட்ராஜாவும் இதயராணியும்

இந்த வாரம் தமிழில் நான்கு படங்கள் வெளியாகவுள்ளது. ‘பியார் பிரேமா காதல்’ படத்திற்குப் பிறகு ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘இஸ்பேட்ராஜாவும் இதயராணியும்’. ‘புரியாத புதிர்’ இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் , ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் உருவாகியிருக்கிறது இப்படம். சாம். சிஎஸ். இசையமைத்திருக்கும் ரொமாண்டிக் காதல் படம் இது. அடுத்ததா ஏழுமலை இயக்கத்தில் கிஷோர் ரவிச்சந்திரன், நித்யா ஷெட்டி நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘அகவன்’. கிராமத்தை மையப்படுத்திய ஆக்‌ஷன் டிராமா இப்படம்.

ஹரிஷ் கல்யாணின் ரொமாண்டிக் ஜனர் போலவே, காதலாகி காதலில் உருவாகியிருக்கும் மற்றுமொரு படம் ’ஜூலை காற்றில்’. கே.சி.சுந்தரம் இயக்க ஆனந்த் நாக், அஞ்சு குரியன் நடித்துள்ளனர். கடைசியா, செல்வகண்ணன் இயக்கத்தில் அஞ்சலி நாயர், மைம் கோபி, பூ ராமு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘நெடுநெல்வாடை’. கிராமத்து மண்வாசனை வீசும் படமாக இது உருவாகியிருக்கிறது.

கோலிவுட்டில் நான்கு படம் வெளியாகியுள்ள நிலையில், பக்கத்து ஸ்டேட்டான டோலிவுட்டில் ஒரு படம் வெளியாகவுள்ளது. ராய் லெட்சுமி நடிப்பில் தெலுங்கில் வெளியாக இருக்கும் படம் ‘வேர் இஸ் தி வெங்கடலட்சுமி’. கிஷோர் குமார் இயக்கத்தில் த்ரில்லர் ஜானரில் உருவாகியிருக்கிறது இப்படம்.

அடுத்து மலையாளக்கரை பக்கம் சென்றால், தினேஷ் பாபோ இயக்கத்தில் ‘கிருஷ்ணம்’ என்கிற படம் வெளியாகவுள்ளது. ரொமாண்டிக் ட்ராமாவா உருவாகியிருக்குற இந்த படத்துல அக்‌ஷய் கிருஷ்ணன், ஐஸ்வர்யா உல்லாஸ், சசி குமார், சாந்தி கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மலையாளம் மட்டுமல்லாமல் தமிழிலும் இப்படம் வெளியாக இருப்பது கூடுதல் தகவல்.

photograph

இறுதியாக, பாலிவுட்டில் ஒரு முக்கியமான ஒரு படமும் வெளியாகவிருக்கிறது. பேட்ட வில்லன் நவாசுதீன் சித்திக், சன்யா மல்கோத்ரா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ’போட்டோகிராஃப்’. புகைப்பட கலையை மையப்படுத்திய இந்தப் படத்தை ரிதிஷ் பத்ரா இயக்கியிருக்கார். பாலிவுட்டில் நீண்ட நாளாக எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம் இறுதியாக நாளை வெளியாகவிருக்கிறது.

இந்தப் படங்களில் எந்த படத்திற்கு போகலாம் என முடிவு செய்து, டிக்கெட்டை புக் செய்துவிடுங்கள் மக்களே...!

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

மேலும் செய்திகள்