ஹரிஷ் கல்யாணின் அடுத்த படம் இதுதான்!

பியார் ப்ரேமா காதல் படத்தை தொடர்ந்து ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும் என இப்படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் விஜய்சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.

அமலாபாலின் அறிமுக படமான சிந்து சமவெளி படத்தில் தான் அமலாபாலுக்கு கணவராக அறிமுகமானவர் ஹரிஷ் கல்யாண். அதன் பின்னர், அரிது அரிது, சட்டப்படி குற்றம், பொறியாளன், வில் அம்பு போன்ற படங்களில் நாயகனாக நடித்துள்ளார்.

ஆனால், பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தான் ஹரிஷ் கல்யாணுக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை அளித்தது. அதே பிக்பாஸில் போட்டியாளராக வந்த ரைசாவும் ஹரிஷும் இணைந்து யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் நடித்த பியார் பிரேமா காதல் படம் சூப்பர் ஹிட் ஆனதை தொடர்ந்து தற்போது, இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும் என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத் அறிமுகமாகியுள்ளார்.

விஜய்சேதுபதியை வைத்து புரியாத புதிர் படத்தை இயக்கிய ரஞ்சித் ஜெயக்கொடி இப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். இப்படம் இறுதிகட்ட படப்பில் உள்ளதாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds