சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ரியோ நடிக்கும் படம்.. சில சுவாரஸ்ய தகவல்கள்

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் விஜே ரியோ ராஜ் அறிமுகமாகும் படம் ‘ நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா’. இந்தப் படம் குறித்த சுவாரஸ்ய தகவலும், லேட்டஸ்ட் அப்டேட்டும் இங்கே..!

sivakarthikeyen

சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமானவர் ரியோ. பின்னர் சீரியல், நிகழ்ச்சித் தொகுப்பாளர் என படிப்படியாக உயர்ந்து தற்பொழுது நடிகராக அவதாரம் எடுத்திருக்கிறார். கனா படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் தயாரிக்கும் இரண்டாவது படத்தில் ஹீரோ ரியோ. பிளாக் ஷீப் யூடியூப் புகழ் கார்த்திக் வேணுகோபாலன் இந்தப் படத்தை இயக்கிவருகிறார். படத்திற்கு ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா’ என்று டைட்டில் தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது.

ரியோ

ரியோவுக்கு ஜோடியாக ஷெரில் என்கிற புதுமுக நாயகி தமிழில் அறிமுகமாகிறார். படத்தில் யூடியூப் சேனல் நடத்துபவராக ரியோவும், பத்திரிகையாளராக ஷெரிலும் நடித்துள்ளனர். தவிர, நாஞ்சில் சம்பத் எம்.பி.-யாக நடித்திருக்கிறார். காமெடி ரோலில் மட்டுமல்லாமல், இண்டர்நெட் பசங்க என்கிற பாடலையும் எழுதியுள்ளார் ஆர்.ஜே.விக்னேஷ் நடித்திருக்கிறார்.

மேயாத மான் விவேக் பிரசன்னா வில்லனாக நடித்திருக்கிறார். இயக்குநர் கார்த்திக் யூடியூப் சேனலில் இருந்து வந்தவர் என்பதால், அது சார்ந்த ஒரு ஜாலியான கதைத்தளம். ஆனால் படத்தின் இறுதியில் ஒரு அழுத்தமான சோசியல் மெசேஜ் சொல்லியிருக்கிறாராம். கூடுதல் தகவல் என்னவென்றால் படத்தில் ஏகப்பட்ட யூடியூப் பிரபலங்கள் நடித்துள்ளனர். படத்துக்கான தலைப்பு தேடி அழையும் வேளையில் எம்.ஜி.ஆர். பாடலான நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா பாடலை கேட்க, அதையே தலைப்பாக தெர்ந்தெடுத்திருக்கிறது படக்குழு. ஏற்கெனவே சிவகார்த்திகேயன் கனா படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். ஆனால் இந்தப் படத்தில் சிவா நடிக்கவில்லை என்பது கூடுதல் தகவல்.

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

மேலும் செய்திகள்