சச்சின் டெண்டுல்கர் பகிர்ந்த இன்ஸ்டாகிராம் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அப்படியென்ன ஸ்பெஷல் புகைப்படம் என்கிறீர்களா? சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் அது.
ரஜினியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ``உங்களை சந்திப்பது எப்போதுமே மகிழ்ச்சியளிக்கிறது ரஜினி சார்’’ என்று நெகிழ்ச்சியுடன் இன்ஸ்டாவில் போஸ்ட் செய்துள்ளார் சச்சின்.
சச்சின் மட்டுமல்ல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கும் பகிர்ந்துள்ளார். சச்சின், ஹர்பஜன், ரஜினி ஆகிய மூவரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அதனை ஹர்பஜன் பகிர்ந்துள்ளார். ஹர்பஜன் சிங் ரஜினி ரசிகர். அவர் மட்டுமல்ல, தோனி கூட ரஜினி ரசிகர்தான். சரி சச்சின் செல்ஃபி விஷயத்துக்கு வருவோம். சச்சின் பகிர்ந்த புகைப்படம் எப்போது எங்கு எடுத்தது என்று நெட்டிசன்ஸ் கேள்வி எழுப்பி வருகின்றனர்.. அண்மையில் அம்பானி வீட்டுத் திருமணத்தில் பிரபலங்களின் சங்கமம் நடந்தது. அங்கு எடுத்த புகைப்படம்தான் அது.
’கிரிக்கெட்டின் கடவுளும் தென்னிந்திய சினிமாவின் கடவுளும் ஒன்றாக சங்கமித்துள்ளனர்’’ என்று நெட்டிசன்ஸ் ஓவராக ஃபீலிங்ஸை கொட்டி வருகின்றனர்.