எமி ஜாக்சன் கர்ப்பம்.. திருமண ஏற்பாடுகளில் தீவிரம் காட்டும் குடும்பத்தினர்

‘மதராச பட்டணம்’ என்ற படத்தின் மூலம் தமிழில் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை  எமிஜாக்சன். இவர் இங்கிலாந்தை சேர்ந்தவர்.  எமி  ஜாக்சன் தன் முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கவர்ந்துவிட்டார்.

எமி ஜாக்ஸன்


இதையடுத்து அவர் தமிழில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார். அதன் பின்னர்  பாலிவுட் பக்கம் சென்றார். தற்போது ஹாலிவுட் பக்கம் சென்றுள்ளார். லண்டனில் பிறந்து வளர்ந்த எமி, கிளாமரில் படுதாராளம் காட்டி வருகிறார். சமூக வலைதளங்களில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் தமிழ் ரசிகர்களை முகம் சுளிக்க வைக்கிறது. ஆனால் அவர் லண்டனில் வளர்ந்தவர் என்பதால் அவருக்கு இதில் எந்த நெருடலும் இருக்காது. 

எமி ஜாக்சன், தொழிலதிபரான ஜார்ஜ் பனயிட்டோ  என்பவரை காதலித்து வருகிறார். லண்டன் வீதிகளில் தனது காதலருடன்  எமி சுற்றி வருவதை பலரும் சமூக வலைதளங்களில் புகைப்படங்களாக பகிர்ந்து வருகின்றனர். அண்மையில் எமி  தனது காதலரான ஜார்ஜ் உடன், கிரீஸ் நாட்டிலுள்ள மிக்கோநொஸ் தீவுக்கு சுற்றுலா சென்றிருந்தார்.  அத்தீவு ஏமியை மிகவும் ஈர்த்துவிட்டது.

எமி

கடற்கரையோரத்தில் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று வெகு நாள்களாக சரியான இடத்தை தேடி வந்தார் எமி . ரொமாண்டிக்கான சூழல் நிறைந்த மிக்கோநொஸ் தீவு எமியை மிகவும் கவர்ந்துவிட்டது. தற்போது மிக்கோநொஸ் தீவில் இருக்கும் ஒரு ரிசார்ட்டில் எமியின் திருமணம் நடைபெறுவதாக உறுதி செய்துள்ளனர்.

இந்நிலையில் திருமணத்துக்கு இடத்தை தேர்வு செய்த கையோடு தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தையும் போட்டு உடைத்துள்ளார் எமி.

எமிஜாக்சன் தன்னுடைய இன்ஸ்டாவில், “ மாடி மீது ஏறி சத்தமாக கத்த வேண்டும் என்றிருக்கிறது. ஆனால், அன்னையர் தினத்தன்று சொல்வதுதான் சரியாக இருக்கும். இந்த உலகத்தில் உன்னை விட வேறு யாரையும் நான் இந்த அளவிற்கு நேசிக்கவில்லை. சுத்தமான மதிப்பான காதல் அது. நமது குட்டி லிப்ராவைப் பார்க்க நாம் காத்திருக்க முடியாது” என்று மெசேஜை தட்டியிருக்கிறார்.

வெளிநாட்டினர்களுக்கு இதெல்லாம் சாதாரண விஷயம் தான். நம்மூர் மக்கள் அதிர்ச்சியில் லைக்ஸையும் போட்டுவருகிறார்கள். அவரின் இந்த அறிவிப்புக்கு வாழ்த்தும் குழிந்துவருகிறது. தவிர, எமி - ஜார்ஜ் ஜோடிக்கு அவர்களின் குடும்பத்தினர் திருமண ஏற்பாடுகளை பரபரப்பாக மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

மேலும் செய்திகள்