அயன்மேனுக்கு விஜய்சேதுபதி வாய்ஸா? ஐயோ சகிக்கல.. அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் தமிழ் ட்ரெய்லரை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்!

உலகமே எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் படத்தின் தமிழ் ட்ரெய்லரை சமூக வலைதளத்தில் நடிகர் விஜய்சேதுபதி வெளியிட்டுள்ளார்.

ட்ரெய்லரை வெளியிட்டது மட்டும் அல்லாமல், மார்வெல் உலகின் சூப்பர்ஸ்டாரான டோனி ஸ்டார்க் மற்றும் அயன்மேன் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் நடிகர் டோனி ஸ்டார்க்குக்கும் விஜய்சேதுபதி வாய்ஸ் கொடுத்துள்ளார்.

விஜய்சேதுபதியின் வாய்ஸில் வெளிவரும் அவரது பட ட்ரெய்லர்கள் ஹிட்டடித்து வரும் நிலையில், அந்த யுக்தியை இந்த படத்திற்கும் வைக்க, அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்திற்கு தமிழ் வசனம் எழுதிய இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் முடிவு செய்து வைத்துள்ளார்.

ஆனால், அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் மற்றும் மார்வெல் சீரிஸ் படங்களில் வெளியான அயன்மேன் வாய்ஸ் தான் நல்லா இருக்கு.. விஜய்சேதுபதி வாய்ஸ் கொஞ்சம் கூட ஷூட் ஆகல, என ட்ரெய்லர் கமென்டிலேயே ரசிகர்கள் கலாய்த்து தள்ளி வருகின்றனர். மேலும், பலர், முதன்முதலாக டிஸ்லைக் போடுவதாகவும், படத்தில், பழைய டப்பிங் ஆர்டிஸ்ட் குரலே மீண்டும் வேண்டும் என்றும் நெட்டிசன்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அயன்மேன் குரலுக்கு விஜய்சேதுபதி வாய்ஸ் கொடுத்திருப்பது போல, பிளாக் விடோ கதாபாத்திரத்துக்கு நடிகை ஆண்ட்ரியா குரல் கொடுத்துள்ளார்.

விஜய்சேதுபதியின் குரலைத் தவிற “கடைசி மூச்சு இருக்கும் வரை போராடுவோம்” என சூப்பர் ஹீரோக்கள் செய்யும் சபதம் அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் தமிழ் ட்ரெய்லருக்கு பலம் சேர்த்துள்ளது.

வரும், ஏப்ரல் 26-ம் தேதி உலகின் பல மொழிகளில் அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் படம் வெளியாகிறது.

Advertisement
More Cinema News
hrithik-and-prabhas-are-sexiest-asian-males
ஆசியாவில் கவர்ச்சி கதாாநாயகனாக பிரபாஸ்-ஹிருத்திக் தேர்வு
actress-kangana-and-team-offered-prayers-to-deceased-amma
தலைவி ஜெயலலிதாவுக்கு தலைவி நடிகை அஞ்சலி.. ஷூட்டிங்கில் 3ம் ஆண்டு நினைவு நாள்..
cant-romance-22-year-old-hero-in-the-50-sonakshi-sinha
இளம் ஹீரோவுடன் நெருங்கி நடிக்கமாட்டேன்.. ரஜினி நடிகை திடீர் அறிவிப்பு..
trisha-lands-key-role-in-mani-ratnams-ponniyin-selvan
சரித்திர படத்தில் திரிஷா முக்கிய வேடம்.. 2வது முறையாக மணியுடன் கைகோர்க்கிறார்..
director-ameer-plays-hero-in-upcoming-tamil-film-narkali
ரஜினி கதையில் நடிக்கிறார் டைரக்டர் அமீர்.. அரசியல் கதை நாற்காலி..
vishal-samantha-and-other-celebs-say-justice-served-to-disha-after-killers-encounter
4 பேர் என்கவுன்ட்டர்: விஷால், சமந்தா  பாராட்டு.. டிவிட்டரில் நட்சத்திரங்கள் வரவேற்பு..
sivakarthikeyans-new-film-titled-doctor
டாக்டர் ஆகும் சிவகாரத்திகேயன்.. அவசரமாக டைட்டில் வைத்தது ஏன்?
thala-ajith-film-release-after-24-years
24 வருடத்துக்கு பிறகு தல படம் மீண்டும் ரிலீஸ்.. டிஜிட்டல் பொலிவுபெறுகிறது..
actor-r-parthiban-opts-out-of-mani-ratnams-ponniyin-selvan
மணிரத்னம் படத்திலிருந்து பார்த்திபன் விலகல்..
archana-kalpathis-demand-from-thalapathy-64
தளபதி 64 அப்டேட் கேட்கும் பிகில் பட தயாரிப்பாளர்.. மோஷன் போஸ்டர், ஃபர்ஸ்ட் லுக் எப்போது?
Tag Clouds