`அஜித் பேட்டிகளை தவிர்ப்பதற்கு காரணம் இது தான்' - கோபிநாத் பகிர்ந்த சீக்ரெட்

அஜித் நடிப்பில் தற்பொழுது உருவாகிவரும் படம் நெர்கொண்ட பார்வை. எச்.வினோத் இயக்கிவரும் இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், இயக்குநர் ஆதிக்ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே, வித்யாபாலன் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துவருகின்றனர். அதிலும் வித்யாபாலன் தமிழில் அறிமுகமாகும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருந்தாலும் பொது விழாக்களில், கலந்துகொள்ள மாட்டார். பேட்டி கொடுக்க மாட்டார் என்ற விமர்சனங்கள் அஜித் மீது உள்ளன. அரசியலிலும் அதே நிலை தான். அதற்கு உதாரணம் தான் சமீபத்தில் அஜித்தை பற்றி பா.ஜ.க தலைவர் தமிழிசை பெருமையாக கூறி அவரது ரசிகர்கள் பாஜகவுக்கு உழைக்க வேண்டும் என கேட்டுகொண்டார். உடனடியாக அதற்கு மறுப்பு தெரிவித்து, 'எனக்கு அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை' என்பதுபோல் அஜித் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் அஜித் ஏன் பேட்டி கொடுப்பதை தவிர்த்து வருகிறார் என விஜய் டிவி தொகுப்பாளர் கோபிநாத் பேசியுள்ளார். அதில், ``நான் அஜித்தை பேட்டி கண்டபோது அவர் வார்த்தைகளை மிகவும் நிதானமாக கையாண்டார். பேட்டி முடிந்த பின் நாங்கள் இருவரும் சிறிது நேரம் பேசினோம். அப்போது தான் ஊடகங்களுக்கு பேட்டியளிக்காததற்கான காரணத்தை அஜித் என்னிடம் சொன்னார்.

``ஆரம்பகாலத்தில் எனக்கு தமிழ் வராது. நான் பேட்டி கொடுத்தால் தமிழ் நடிகர் தமிழே சரியாக பேசவில்லை என்று சொன்னார்கள். ஆங்கிலத்தில் பேசினால் தமிழ் நடிகர் தமிழில் பேசாமல் ஆங்கிலத்தில் பேசுகிறார் என்று விமர்சனம் செய்தார்கள். இதை சரிசெய்வதற்கான பின்புலம் என்னிடம் இல்லை. சிலநேரங்களில் இயல்பாக பேசினால் தவறாக செய்தி வெளிவருகிறது. பேட்டி கொடுக்கவில்லை என்றால் இவர் அவ்வளவு பெரிய மனிதரா என்ற விமர்சனம் வந்தது. அதனால் தான் பேட்டி அளிக்காமல் தவிர்த்து வந்தேன்” என்று அஜித் தன்னிடம் கூறினார்.

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

மேலும் செய்திகள்