வெளியேறுவதைத் தவிர வேறு வழி இல்லை: ட்விட்டர் மீது அமிதாப் ஆத்திரம்

by Isaivaani, Feb 1, 2018, 19:08 PM IST

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனை சமூக வலைத்தளமான ட்விட்டரில் பின்தொடர்வோர் எண்ணிக்கை 30 மில்லியனாக (மூன்று கோடியாக) 2017ம் ஆண்டு இறுதியில் உயர்ந்திருந்தது. கடந்த 2016ம்  ஆண்டு செப்டம்பர் மாதம் 21ம் தேதி நிலவரப்படி அமிதாப் பச்சனை ட்விட்டரில்பின்தொடர்ந்தோரின் எண்ணிக்கை ஒருகோடியே எழுபது லட்சமாக இருந்த நிலையில், இந்த ஒரு ஆண்டு கால வேளையில்அவரை சுமார் 50 லட்சத்துக்கும் அதிகமானோர் புதிதாக பின்தொடர ஆரம்பித்திருந்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் திடீரென அமிதாப் பச்சனை பிந்தொடர்வோர்களின் எண்ணிக்கையை ட்விட்டர் குறைத்தது. இதுபோல தொடர்ந்து பல தொழில்நுட்ப குளறுபடிகளை ட்விட்டர் செய்து வருவதாகக் கடிந்துகொண்ட அமிதாப், தான் ட்விட்டர் கணக்கில் இருந்தே வெளியேறப்போவதாக மிரட்டல் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ட்விட்டர் என் ஃபாலோயர்களைக் குறைத்தது ஏன்? விலக வேண்டிய நேரம் வந்துவிட்டது. பயணத்துக்கு நன்றி. கடலில் இதைவிட உற்சாகமான மீன்கள் ஏராளமாக உள்ளன” என விமர்சிக்கும் வகையில் ட்விட்டருக்கு எதிராகக் கருத்து வெளியிட்டுள்ளார்.

You'r reading வெளியேறுவதைத் தவிர வேறு வழி இல்லை: ட்விட்டர் மீது அமிதாப் ஆத்திரம் Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை