பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் பல்வேறு மொழிகளில் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர். வட இந்தியாவின் சூப்பர் ஸ்டாராகத் திகழும் அமிதாப் பச்சன் சமீப காலமாகவே சமூகம் சார்ந்த செயல்படுகளில் ஈடுபட்டு வருகிறார்.
அமிதாப் பச்சான் உத்திர பிரதேசத்தினைச் சேர்ந்த 1,398 விவசாயிகளின் வேளாண் கடனை அடைக்க 4.05 கோடி ரூபாய் நிதி அளித்து உதவியது நாம் அனைவரும் தெரிந்ததே. அதுமட்டுமில்லை புல்வாமா தீவிரவாதத் தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு, தலா 5 லட்சம் ரூபாய் வழங்கினார். இந்த இரண்டு நிகழ்வுகள் மக்கள் மனதில் அவருக்கு உயர்ந்த இடத்தை கொடுத்துவிட்டது. அவர் அதிகம் சம்பாதிக்கிறார். உதவி செய்வதில் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்று சிலர் நினைக்கக்கூடும். பணம் வைத்திருக்கும் அனைவரும் உதவி செய்ய முன் வருவது இல்லை.
அமிதாப் பச்சன் பற்றிய இன்னொரு விஷயம் தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது. 2018-2019 ஆம் ஆண்டுக்கான நிதி ஆண்டில் வருமான வரியாக ரூபாய் 70 கோடியை அரசுக்கு செலுத்தியுள்ளதாக நடிகர் அமிதாப் பச்சன் உதவியாளர் தெரிவித்துள்ளார். `இது உண்மையில் நல்ல விஷயம்; அமிதாப் நியாயமான மனிதர்’ என மக்கள் பாராட்டி வருகின்றனர்.