பொதுவெளிக்கு வந்த குடும்ப தகராறு.. சங்கீதாவுக்கும் அம்மாவுக்கும் என்னதான் பிரச்னை

`பிதாமகன்’ சங்கீதாவுக்கு அவரின் அம்மாவுக்கும் இடையிலான விரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது.

சங்கீதா

நடிகை சங்கீதா, பாடகர் கிரிஷை திருமணம் செய்துக்கொண்டு குடும்பம், குழந்தை என செட்டில் ஆகிவிட்டார். சினிமாவில் இருந்து சற்று விலகி சின்னத்திரையில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில் திடீரென அவரின் பெயர் செய்தி ஊடகங்களில் வரத் தொடங்கிவிட்டது. அதற்கு காரணம் சங்கீதாவின் அம்மா பானுமதி.

``என் மகள் சங்கீதா வயதான என்னை வீட்டை விட்டுத் துரத்திவிட்டு, நான் வசிக்கும் வீட்டை அபகரிக்க முயற்சி செய்கிறார் " என சங்கீதா மீது சில தினங்களுக்கு முன் மாநில மகளிர் ஆணையத்தில் பானுமதி புகார் அளித்திருந்தார்.

சங்கீதாஇந்தப் புகார் குறித்துக் கேட்டதற்கு சங்கீதா எந்த கருத்தும் சொல்லாமல் மெளனம் சாதித்தார். அதன் ஒஇறகு ஊடகங்கள் சங்கீதா பற்றி நெகட்டிவ்வாக எழுத ஆரம்பித்துவிட்டன. இதனால் பொறுமையை இழந்த சங்கீதா, தன் ட்விட்டரில் சில கருத்துகளைப் பதிவிட்டிருந்தார். `13 வயதிலேயே என்னை பள்ளியில் இருந்து நிறுத்தி வேலைக்கு அனுப்பினீர்கள். என்னிடம் பல பிளாங்க் செக்கில் கையெழுத்து வாங்கி வைத்துள்ளீர்கள். இதுவரை வேலைக்கே செல்லாமல் இருக்கும் உங்கள் மகன்கள் குடிக்கும் போதைக்கும் அடிமையானவர்கள். அவர்களுக்காக என்னை சுரண்டினீர்கள். நானாக போராடி வெளியேறும் வரை எனக்கு திருமணம் செய்யவில்லை. மேலும், என் கணவரை தொல்லை செய்து என் குடும்ப அமைதியை கெடுத்தீர்கள். இப்போது பொய் புகார் அளித்துள்ளீர்கள். தெரிந்தோ தெரியாமலோ, உங்களால்தான் நான் சாதாரண பெண்ணாக இல்லாமல் இப்போது தைரியமான பெண்ணாக நிற்கிறேன். அனைத்திற்கும் நன்றி’’ என உருக்கமாக பதிவிட்டிருந்தார்.

சங்கீதாவின் அம்மா பானுமதி சங்கீதா வைத்துள்ள இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்துள்ளார். ``சங்கீதாவை நான் கான்வெண்ட்டில் படிக்க வைத்து நல்ல ஒழுக்கத்துடன் வளர்த்தேன். அவர் ட்விட்டரில் எழுதியுள்ளது அத்தனையும் கற்பனை’’ என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.

சங்கீதாவின் நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்ததில், ``சங்கீதாவிடம் இருந்து வீட்டை வாங்கி அவரின் மகன்களுக்கு கொடுக்க பானுமதி முயற்சி செய்து கொண்டிருக்கிறாராம். அவரது மகன்களின் தூண்டுதலில் பேரில் தான் போலீஸ் புகார் அளவுக்கு பானுமதி சென்றிருக்கிறார்.

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

மேலும் செய்திகள்

Tamil news, Latest Tamil News, Tamil News Online, Tamil Nadu Politics, Crime News, Tamil Cinema, Tamil Movies, Movie review, Sports News