வீட்டிலேயே குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் சத்தான நொறுக்குத் தீனி ரோஸ் குக்கீஸ் எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு - 300 கிராம்
முட்டை - 2 முட்டை
சர்க்கரை - 100 கிராம்
ஏலக்காய்ப் பொடி - ஒரு டேபிள் ஸ்பூன்
தேங்காய் பால் - 200 மி.லி.,
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் முட்டையின் வெள்ளைக் கரு ஊற்றி அடித்துக் கொள்ளவும்.
பிறகு, மிக்ஸியில் பொடித்த சர்க்கரையை சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும்.
அத்துடன், ஏலக்காயத் தூள், தேங்காய் பால் சேர்த்து மீண்டும் கலந்துக் கொள்ளவும்.
பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக அரிசி மாவு சேர்த்து கட்டி இல்லாதவாறு கலந்துக் கொள்ளவும். பஜ்ஜி மாவு பதத்துக்கு தயார் செய்யவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் ரோஸ் குக்கீஸ் அச்சு எடுத்து எண்ணெய்யில்விட்டு சூடு செய்யவும்.
பிறகு, அச்சு எடுத்து மாவில் முக்கி மீண்டும் எண்ணெய்யில்விட்டு பொரித்து எடுக்கவும்.
அவ்ளோதாங்க.. சுவையான ரோஸ் குக்கீஸ் ரெடி..!