விஜய் சேதுபதியிடம் கொட்டிக்கிடக்கும் திரைப்படங்கள்! - திரைத்துறை பொறாமை

வருடத்திற்கே ஒன்று அல்லது இரண்டு திரைப்படங்கள் கொடுப்பதற்கே நடிகர்கள் திண்டாடி வருகையில், விஜய் சேதுபதிக்கு மட்டும் எப்படி எத்தனைப் படங்கள் குவிந்து கிடக்கிறது என்று திரைத்துறையினரே மூக்கில் விரல் வைத்து உட்காந்து இருக்கின்றனர்.

Feb 3, 2018, 07:49 AM IST

வருடத்திற்கே ஒன்று அல்லது இரண்டு திரைப்படங்கள் கொடுப்பதற்கே நடிகர்கள் திண்டாடி வருகையில், விஜய் சேதுபதிக்கு மட்டும் எப்படி இத்தனைப் படங்கள் குவிந்து கிடக்கின்றன என்று திரைத்துறையினரே மூக்கில் விரல் வைத்து உட்காந்து இருக்கின்றனர்.

2016ஆம் ஆண்டு தர்மதுரை, றெக்க, ஆண்டவன் கட்டளை, காதலும் கடந்து போகும், இறைவி, சேதுபதி என தொடர்ந்து ஹிட் அடித்தார். அதேபோல் கடந்த 2017ஆம் ஆண்டும் விக்ரம் வேதா, புரியாத புதிர், கவண், கருப்பன் என அடுத்தடுத்து தாக்கினார்.

இந்நிலையில், இந்த ஆண்டு அவருக்கு முதல் திரைப்படமான ஒரு நல்ல நாள் பார்த்து சொல்லு ரீலிஸ் ஆகியது. அதனைத் தொடர்ந்து, ஜூங்கா, சீதகாதி, 96, சூப்பர் டீலக்ஸ், மாமனிதன், மணிரத்னம் படம் மற்றும் தெலுங்கில் ஒரு படம் உள்ளிட்ட ஏழு படங்களில் நடித்து வருகிறார்.

அதுவுமில்லாமல் அவரது படங்கள் வசூலிலும் சக்கைபோடு போடுகின்றன. ஒருசில படங்கள் மட்டும் சுமாராக ஓடினாலும், தயாரிப்பாளர்களின் கையை கடிப்பதில்லை. இதனால், இயக்குநர் மட்டும் அல்லாமல் தயாரிப்பாளர் விரும்பும் நட்சத்திரமாக விஜய் சேதுபதி இருக்கிறார்.

இதுதான் திரைத்துறையினர் பொறாமைப்பட காரணமாக இருக்கிறது.

You'r reading விஜய் சேதுபதியிடம் கொட்டிக்கிடக்கும் திரைப்படங்கள்! - திரைத்துறை பொறாமை Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை