மூடர்கூடம் நவீன் திருமணம் பற்றி எழுந்த சர்ச்சைகள்.. உண்மை இதுதான்

Advertisement

மூடர்கூடம் படத்தின் மூலம் பலருக்கும் பரிட்சயமான இயக்குநர் நவீன். இவரின் சமீபத்திய ட்வீட் பலருக்கு குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பலரை கடுப்பேற்றியும் விட்டிருக்கிறது. அது குறித்த விளக்க செய்தி தொகுப்பே இந்த கட்டுரை.



மூடர் கூடம் நவீன்

இயக்குநர் நவீன் தற்பொழுது அலாவுதீனின் அற்புத கேமரா என்கிற படத்தை இயக்கி, நடித்துவருகிறார். படத்தில் நாயகியாக ஆனந்தி நடித்திருக்கிறார். இப்படம் நவீனுக்கு அடுத்து வெளியாக இருக்கிறது. இந்நிலையில் நவீன் சமீபத்தில் ட்விட்டரில் ஒரு ட்விட்டை தட்டினார். அது, “ எனக்கும் சிந்துவுக்கும் நடந்தது பதிவுத் திருமணம். நாங்கள் இருவரும் சாதிமத நம்பிக்கையற்ற பகுத்தறிவுப் பாதை நடப்பவர்கள் என்பதால்தான் காதல் பிறந்தது. என்றும் சிந்து சிந்துவாகவே இருப்பார். நாங்கள் மத எதிர்ப்பாளர்கள் இல்லை- மத மறுப்பாளர்கள், மனித சமத்துவத்தின் ஆதரவாளர்கள். #மனிதசமத்துவம் என்கிற ஹேஸ்டேக்குடன் ட்விட் போட்டிருந்தார்.

இந்த ட்வீட்டை பார்த்த பலரும் நவீனுக்கு தற்பொழுது தான் திருமணம் முடிந்திருப்பதாகவும், நவீன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் என்றும் செய்திகளை பரப்பிவந்தனர்.  இந்த ட்வீட்டை நவீன் போட காரணம் பி.ஜே..பி கட்சி தான். சமீபத்தில் நவீன் ஒரு தனியார் பத்திரிகையில் ஒரு பேட்டி ஒன்று கொடுத்திருந்தார். அதில் பி.ஜே.பி-க்கு ஓட்டு கிடையாது என்று கூறியிருந்தார். அதனால் கொந்தளித்த பி.ஜே.பி-கட்சியினர், இவர் முஸ்லீம் என்றும், இந்துப் பெண்ணை இஸ்லாமியராக மாற்றி திருமணம் செய்துகொண்டார் எனவும், இவர் லவ் ஜிகாதி என்றும் செய்திகளை பரப்பிவந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் தான், அவரின் கல்யாண புகைப்படத்தை பதிந்து, அதற்கு பதிலடி கொடுத்தார்.

இது தெரியாத, நெட்டிசன்கள், நவீன் இரண்டாம் திருமணம் செய்துகொண்டார் என்றெல்லாம் புரளியை கிளப்பி விட்டிருக்கிறார்கள். இந்த புகைப்படம், நவீன் பதிவு திருமணம் செய்துகொண்ட போது எடுத்த புகைப்படம். அவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள் என்பது கூடுதல் தகவல். அவர் பிறப்பால் இஸ்லாமியர் என்பது உண்மைதான். ஆனால் நவீனும் அவரின் மனைவியும் சமத்துவத்தின் ஆதரவாளர்கள்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
/body>