சீப் பப்ளிசிட்டி சின்மயி பண்ணும்போது..நான் சீப் பப்ளிசிட்டி பண்ணா தப்பா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார் தயாரிப்பாளர் கே.ராஜன்.
தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் கே.ராஜன். அண்மையில், நடந்த ‘பற’ இசை வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், சிலர் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருக்கும் நபர்களை சிதைக்கலாமா? என்ற கேள்வியை எழுப்பி பாடகி சின்மையைத் தாக்கி பேசியது சர்ச்சையை கிளப்பியது.
இந்நிலையில், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்கு பேட்டியளித்த கே.ராஜன், ‘நான் இவ்வாறு பேசியதுக்கு சின்மயிதான் காரணம். அவருக்கும் வைரமுத்துவுக்கும் என்ன விஷயம் என்பது தெரியாது. #metoo உருவான சமயத்தில் வைரமுத்து மீது புகார் தெரிவித்தார். அதற்கு வைரமுத்து மறுப்பு தெரிவித்துவிட்டார். #metoo இப்ப மறைந்துவிட்டது. இப்படி இருக்கும் போது, சமீபத்தில் பிரசாரத்துக்கு சென்ற குஷ்புவிடம் ஒருவர் தவறாக நடக்க முயன்றார்.அதனால், குஷ்பு அந்த நபரின் கன்னத்தில் பளார் என்று அறைந்த விஷயம் நாம் அறிந்ததுதான். இதற்கு சின்மயி ட்விட்டரில் ‘எனக்கும் வாய்ப்பு கிடைக்கும்போது வைரமுத்துவை பளார் என அறைவேன்’ எனக் கூறியுள்ளார். இது சரியா? சின்மயி இப்படி சொல்லும் போது எந்த தமிழனாலும் சும்மா இருக்க முடியாது.
வைரமுத்து-சின்மயி இடையில் நடந்தது உண்மையோ..? பொய்யோ..? இப்படி சீப் பப்ளிசிட்டி சின்மயி பண்ணும்போது கே.ராஜன் சீப் பப்ளிசிட்டி பண்ணா தப்பா? சின்மயி புகார் சொன்னது சாதாரண தெருவில் போகும் நபரை அல்ல; ஒரு தமிழ் கவிஞரை. சின்மயி புகாருக்கு ஆதாரம் இருக்கிறதா? ஆதாரம் இல்லாம சொல்லுவதே தவறு’ என்று பேசினார்.
முன்னதாக, கே.ராஜனின் சர்ச்சை பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ள சின்மயி, ‘சிதைக்க ஆட்கள் வைத்து இருக்கிறாராமே. பயப்பட வேண்டுமா’ என ட்விட்டரில் பதிவிட்டு கேள்வி எழுப்பியுள்ளார்.