MeToo பாலியல் புகார்களை வைத்து குறும்படம் - தனுஸ்ரீ தத்தாவால் பாலிவுட்டில் மீண்டும் கிளம்பும் புயல்

#MeToo மூலம் எத்தனையோ பெண்கள் பல துறைகளில் இருந்தும் தங்களுக்கு நேர்ந்த அவலங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து கொண்டிருக்கின்றனர். அதில் உண்மைகளும் இருக்கின்றன, சில சுவாரஸ்யப் பொய்களும் இருக்கின்றன.

எதை நம்புவது, எதை மறுப்பது என்றே தெரியாமல் முழிக்கிறோம். அந்த அளவுக்கு இந்த #MeToo வைப் பகுத் தாராய்ந்து பார்க்க வேண்டி இருக்கிறது. சமீபத்தில் #MeToo புகார்கள் இந்தியாவில் ஒரு பிரபலமடைந்த சமயம் தமிழில் `தீராத விளையாட்டுப் பிள்ளை’ திரைப்படம் மூலம் பிரபலமான நடிகை தனுஸ்ரீ தத்தா மூன்று முறை தேசிய விருதுகளைப் பெற்ற நடிகர் நானா படேகர் #MeToo புகார் தெரிவித்திருந்தார். இவரின் குற்றச்சாட்டுக்கு பிறகு பாலிவுட்டில் பலர் MeToo புகார்கள்தெரிவித்தனர். இயக்குனர்கள் மீதும், புகழ்பெற்ற நடிகர்கள் மீதும் புகார்கள் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

தற்போது இந்த MeToo மூலம் சொல்லப்பட்ட பாலியல் புகார்களை எல்லாம் வைத்து குறும்படம் ஒன்றை இயக்கியுள்ளார் தனுஸ்ரீ தத்தா. ‘கார்டியன் ஏஞ்சல்’ என்று பெயரிட்டுள்ள இந்தப் படத்தில் வாய்ப்பு தேடும் நடிகைகள் இயக்குனர், நடிகர்களால் எப்படி பாலியல் தொல்லைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர் என்பதை அவர் காட்சிப்படுத்தியுள்ளார். இந்தப் படத்தின் பணிகள் முடிந்துவிட்டதாக கூறியுள்ளார் தனுஸ்ரீ.

இந்த குறும்படம் விரைவில் வெளியாகவுள்ளதால், பாலிவுட்டில் மீண்டும் ஒரு புயல் போவதாக அங்குள்ள டெக்னீஷியன்கள் பேசி வருகின்றனர்.

 

 

 

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

மேலும் செய்திகள்

Man-arrested-for-harrassing-Bengali-actress-Arunima-Ghosh-on-social-media
பிரபல வங்காள நடிகைக்கு சமூக வலைதளம் மூலம் 'பாலியல் தொல்லை'! மர்ம நபர் கைது
Kangana-Sister-blame-Tapsee-directly-and-a-cold-war-started-in-bollywood
பாலிவுட்டில் டாப்ஸி கிடு கிடு வளர்ச்சி; கடுப்பில் கங்கனா குடும்பம்!
Three-Bollywood-Actors-play-villain-role-against-Super-star-Rajinikanth
ரஜினியுடன் மோதும் 3 பாலிவுட் நடிகர்கள்!
Aadai-Movie-Director-cries-for-India-loss-in-World-Cup-semis
ஆடை பட இயக்குநரை அழ வைத்த தோனி!
Kaappan-Satellite-rights-bagged-by-Sun-tv
காப்பான் சேட்டிலைட் ரைட்ஸை வாங்கிய சன் டிவி!
Tomorrow-six-movies-will-be-release-in-kollywood
நாளைக்கு 6 படங்கள் ரிலீஸ்! ஜெயிக்கப்போவது யாரு?
Trending-Amala-Paul-On-How-She-Filmed-The-Nude-Scene-In-Aadai
ஆடை படப்பிடிப்பு பற்றி அமலாபால் புதிய தகவல்
Actress-Samantha-visit-Tirupathi-temple
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை சமந்தா சுவாமி தரிசனம்..!
Cheque-fraud-arrest-warrant-against-actor-Sarath-Kumar-and-Radhika-Sarath-Kumar
செக் மோசடி வழக்கு ; சரத்குமார், ராதிகாவுக்கு பிடிவாரண்ட்
Actress-kasturi-critisized-bigboss-program
குழந்தைகள் பார்க்கும் நிகழ்ச்சியா இது? பெற்றோரே உஷார் : கஸ்தூரி வார்னிங்

Tag Clouds