ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்துள்ள காஞ்சனா 3 திரைப்படம் நெகட்டிவ் விமர்சனங்களை அதிகளவில் பெற்றாலும், தியேட்டரில் மக்கள் திருவிழாவை போலத்தான் படத்தை கொண்டாடி வருகிறார்கள். முதல் வார இறுதியில் காஞ்சனா 3 திரைப்படம் 60 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உலகமெங்கும் 2600 திரையரங்குகளில் வெளியான காஞ்சனா 3 திரைப்படம், முந்தைய பாகங்கள் அளவுக்கு சூப்பராக இல்லை எனவும், தேவையற்ற காட்சி அமைப்புகள் மற்றும் சுய தம்பட்டங்களை ராகவா லாரன்ஸ் இந்த படத்தில் அடித்துள்ளார் என விமர்கர்கள் சரமாரியாக காஞ்சனா 3 படத்தின் மீது அம்பு மழை பொழிந்தனர்.
ஆனால், காஞ்னா 2 திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலை குவித்து காஞ்சனா சீரிஸை காஞ்சுரிங் சீரிஸ் அளவுக்கு கொண்டு சென்று விட்டது.
இதனால், படத்தின் வசூல் அதிகரித்துள்ளது. காஞ்சனா 3 வெளியான முதல் நாளில் 10 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலை தமிழ் நாட்டில் ஈட்டியுள்ளது. இது இந்த ஆண்டு பேட்ட மற்றும் விஸ்வாசம் படங்கள் செய்த வசூல் சாதனைக்கு சமமாக பார்க்கப்படுகின்றது.
தெலுங்கு மொழியிலும் டப் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்ட காஞ்சனா 3, அங்கு வெளியான நானியின் ஜெர்ஸி படத்தை ஓவர்டேக் செய்து 15 கோடி ரூபாய் வசூலை முதல் மூன்று நாள்களில் எடுத்துள்ளது.
இதே ரேஞ்சில் அடுத்த வாரமும் காஞ்சனா 3 ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக ஓடினால், 100 கோடிக்கும் மேல் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.