ராகவா லார்ன்ஸின் முனி 4 / காஞ்சனா 3 படம் கடந்த வாரம் வெளியானது.
ராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்து தயாரித்த படம் காஞ்சனா 3. சன் பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கி, இப்படத்தை வெளியிட்டது. படத்தில் ஓவியா, வேதிகா, நிக்கி, கோவைசரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி, டெல்லி கணேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். முதல் மூன்று பாகங்கள் கொடுத்த வசூலும், பாராட்டும் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.
கடந்த வெள்ளியில் விடுமுறை தின ஸ்பெஷலாக வெளியாகி மூன்று நாட்களுமே கூட்டம் அலைமோதுகிறது. ரசிகர்களும் குடும்பம் குடும்பமாக திரையரங்குக்கு சென்று படத்தை பார்த்துவருகின்றனர். இந்நிலையில் தமிழ்ராக்கர்ஸ் இணையதளம் காஞ்சனா 3 படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளது. இதனால் படக்குழு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளது.
பொதுவாக சன்பிக்சர்ஸின் திரைப்படங்கள் இணையத்தில் அத்தனை எளிதாக வெளியாகாது. சன் பிக்சர்ஸ் படங்கள் என்றாலே பல கிடுக்குப் பிடிகள் இருக்கும். இதையும் மீறி படம் இணையத்தில் வெளியானதால் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளது. சன் பிக்சர்ஸ் மீதான நம்பிக்கையையும் இப்படம் பொய்யாக்கிவிட்டது என்று வருத்தப்படுகின்றனர் திரைத்துறையினர்.
நிற்க.... கஞ்சனா 3-யுடன் வெளியான சிறுபட்ஜெட் படங்களான வெள்ளைப்பூக்கள் மற்றும் மெஹந்தி சர்க்கஸ் படங்கள் இன்னும் இணையத்தில் லீக் ஆகவில்லை என்பது மட்டும் பெரும் மகிழ்ச்சியான விஷயம்.