இது ஏப்ரல் மாதம் அல்ல... சூர்யா மாதம் என்றால் நம்புவீர்களா?

Lucky month for actor suriya

by Sakthi, Apr 23, 2019, 21:28 PM IST

இந்த மாதம் முழுவதும் சூர்யா சார்ந்த பல செய்திகள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது.

சூர்யா

இந்த மாதம் ஏப்ரல் 5ஆம் தேதி சூர்யா தயாரிப்பில் விஜயகுமார் இயக்கத்தில் உறியடி 2 படம் வெளியானது. இறுதிச்சுற்று இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் சூர்யாவின் 38வது படத்தின் பூஜை ஏப்ரல் 7ஆம் தேதியும், படப்பிடிப்பு ஏப்ரல் 8ஆம் தேதியும் நடந்தது.. தற்பொழுது அப்படத்தின் படப்பிடிப்பில் தான் இருக்கிறார் சூர்யா.
அடுத்ததாக ஏப்ரல் 12ஆம் தேதி மாலை செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் தண்டல்காரன் என்கிற பாடல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அதற்கு அடுத்தநாளே, சூர்யாவின் 38வது படமான சுதாகொங்கரா இயக்கிவரும் படத்துக்கு சூரரைப் போற்று என்கிற டைட்டில் அறிவிக்கப்பட்டது. பின், ஏப்ரல் 14ஆம் தேதி கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் காப்பான் பட டீஸர் வெளியானது.

இறுதியாக, நேற்று ஏப்ரல் 22ஆம் தேதி மாலை சூர்யாவின் 39வது படத்தின் அறிவிப்பு வெளியானது. சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கிறார் என்கிற செய்தி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இப்போ சொல்லுங்க... அடுத்தடுத்து திக்குமுக்காடவைக்கும் அளவுக்கு அறிவிப்பால் சூர்யா ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கிறது. ஆக, இது சூர்யா மாதம்தானே....

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அதிகம் படித்தவை