நாள் கணக்கில் சம்பளம் கேட்கும் சத்யராஜ்! எவ்வளவு தெரியுமா?

Sathyaraj salary in movies

Apr 25, 2019, 18:55 PM IST

பாகுபலியில் கட்டப்பா கேரக்டரில் நடித்ததால் உச்ச உயரத்தை அடைந்தார் சத்யராஜ். தற்பொழுது தமிழை விட, தெலுங்கில் அதிகமான படங்களில் நடித்தும் வருகிறார் சத்யராஜ்.

ராஜமெளலி இயக்கத்தில் ராணா, பிரபாஸ் நடிப்பில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்ற படம் பாகுபலி திரைப்படங்கள். இப்படத்தில் கட்டப்பா கேரக்டரில் நடித்தார் சத்யராஜ். ஆரம்பத்தில் ஒரு படத்திற்கு இவ்வளவு சம்பளம் என்று மட்டுமே வாங்கிவந்தார் சத்யராஜ். ஆனால் பாகுபலியில் நடிக்க, ஒரு நாளைக்கு இரண்டு லட்சம் என்கிற ரீதியில் சம்பளத்தைப் பெற்றார். பாகுபலிக்கு நீண்ட நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றது. எவ்வளவு லட்சம் வாங்கியிருப்பார் என்பதை நீங்களே கணக்குப் போட்டுக்கொள்ளுங்கள்.

சத்யராஜ் கேட்கும் சம்பளத்தை தமிழில் கொடுக்க யாரும் முன்வரவில்லை. ஆனால் தெலுங்கில் ஏகபோக வரவேற்பு. தற்பொழுது தெலுங்கில் தான் அதிக படங்கள் நடித்துவருகிறார் சத்யராஜ். சமீபத்தில் நானி நடிப்பில் வெளியான ஜெர்சி படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தார் சத்யராஜ். அந்தப் படமும் வெளியாகி சத்யராஜுக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்துள்ளது. அதனால் தன்னுடைய சம்பளத்தை அதிகப்படுத்தியிருக்கிறார் சத்யராஜ். எவ்வளவு தெரியுமா? ஒரு நாளைக்கு பத்து லட்சம் சம்பளம் கேட்கிறாராம். இருப்பினும் சத்யாராஜூக்கு காத்திருக்கும் தயாரிப்பாளர்களின் பட்டியல் குறையவில்லை.

வில்லனாக குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளார்’..! –சித்தார்த் மறைமுக கிண்டல்

You'r reading நாள் கணக்கில் சம்பளம் கேட்கும் சத்யராஜ்! எவ்வளவு தெரியுமா? Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை