ஜெய்யின் “ஜருகண்டி” பட டீஸரை வெளியிட்டார் சூர்யா (வீடியோ)

ஜெய் நடித்து வரும் “ஜருகண்டி” படத்தின் டீஸரை இன்று மாலை சூர்யா வெளியிட்டுள்ளார். இந்த டீசர் இணையத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வெங்கட்பிரபுவிடம் உதவி இயக்குனராக இருந்த பிச்சுமணி, “ஜருகண்டி” என்ற படத்தை முதன்முதலாக இயக்குகிறார். இதில் ஜெய் ஹீரோவாகவும், இவருக்கு ஜோடியாக ரெபா மோனிகா ஜான் என்பவரும் நடிக்கிறார். மேலும், ரோபோ சங்கர், இளவரசு, டேனியல், மைம் கோபி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தை நடிகர் நிதின் சத்யா தயாரிக்கிறார். இதன் பர்ஸ்ட் லுக்கை இயக்குனர் முருகதாஸ் நேற்று வெளியிட்டார். இந்தப் படத்தின் டீசரை நடிகர் சூர்யா இன்று மாலை 5 மணிக்கு வெளியிட்டுள்ளார்.

படத்தின் டீசர் தற்போது இணையத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஜருகண்டி படத்தின் டீசர் இதோ..