நீங்களும் தானோஸ் ஆகலாம் கூகுள் உருவாக்கிய சூப்பர் ஐடியா!

Google create thanos hand to destroy half of its creation

by Mari S, Apr 26, 2019, 19:02 PM IST

அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி மாபெரும் வசூல் வேட்டையை செய்து வருகிறது. உலகளவில் ட்விட்டர் ட்ரெண்டிங்கிலும் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் காலை முதலே குடி கொண்டு இருக்கிறது.

மார்வெல் உலகின் கிளைமேக்ஸ் படமாக அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் வந்துள்ளது. படம் எமோஷனாலாக கனெக்ட் ஆகி இருப்பதாகவும், இந்த பாகத்தில் டோனி ஸ்டார்க் இறந்து விடுகிறார் என்ற தகவலும் படம் பார்த்த விமர்சகர்கள் காலை முதலே எழுதி தள்ளி ஸ்பாய்லர் செய்துவிட்டனர்.

இந்நிலையில், படத்தின் பிரம்மாண்ட ரிலீஸை முன்னிட்டு கூகுள் நிறுவனம் வில்லன் தானோஸ் குறித்த ஒரு விஷயத்தை கூகுளில் செய்துள்ளது.

அது என்னவென்றால், கூகுளில் (Thanos)தானோஸ் என்று தேடினால், 6 இன்பினிட்டி கற்கள் பதித்த தானோஸின் கை காட்சியளிக்கும். அந்த கையை சொடுக்கினால் போதும், தானோஸ் எப்படி இன்பினிட்டி வார் படத்தில் பாதி உலகை அழித்தானோ? அதே போல நீங்களும், கூகுளில் உங்கள் கண் முன்னே தெரியும் பாதி இணைய பக்கங்களை அழிக்க முடியும்.

கூகுள் ஏற்படுத்தித் தந்துள்ள இந்த பிரத்யேக விளையாட்டை உலகில் உள்ள பல மார்வெல் ரசிகர்கள் இன்று அதிகளவில் விளையாடி வருகின்றனர்.

நீங்களும் ஒரு நொடி தானோஸ் ஆக உடனடியாக கூகுளில் தானோஸ் என்று டைப் செய்து சொடுக்குங்கள்.

அழிப்பது ஈஸியான விஷயம். ஆனால், அழிவை தடுப்பது தான் உண்மையா சூப்பர் ஹீரோக்களின் வேலை. அதை எவ்வாறு நம்ம அவெஞ்சர்ஸ் டீம் அவர்களின் இன்னுயிர்களை தந்து உலக மக்களை காப்பற்றுகிறார்கள் என்பதை திரையில் கண்டு ரசியுங்கள்.

இனிமே என்ன யோகிபாபுவுடன் கம்பேர் பண்ண முடியாது; மீண்டும் பழைய ஃபார்முக்கு மாறிய சிம்பு!

You'r reading நீங்களும் தானோஸ் ஆகலாம் கூகுள் உருவாக்கிய சூப்பர் ஐடியா! Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை