தனது சொந்த பெயரின் ஸ்பெல்லிங்கையே மறந்த தோர் நடிகர்; சுட்டிக் காட்டிய நக்கீர நெட்டிசன்கள்!

ஹாலிவுட்டில் உள்ள புகழ்பெற்ற சீன திரையரங்கமான டிசிஎல்லில் நேற்று அவெஞ்சர்ஸ் நடிகர்களுக்கு கெளரவம் அளிக்கும் வகையில் அவர்களின் கை அச்சுகளை களிமண்ணில் பதிந்து, அதன் கீழே அவர்களின் பெயரை எழுதும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், கலந்து கொண்ட ராபரட் டெளனி ஜூனியர், கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், ஸ்கார்லெட் ஜோஹன்சன், மார்க் ரஃபலோ, ஜெரிமி ரன்னர், கிறிஸ் எவான்ஸ் உள்ளிட்ட சூப்பர் ஹீரோ நடிகர்கள் தங்களது கை அச்சுகளை அங்கே பதிவு செய்தனர்.

அப்போது, சூப்பர் ஹீரோ மற்றும் டெமி காட் என்ற சிறப்புக்குறிய தோர் ஹீரோ கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் தனது கை அச்சை களி மண்ணில் பதிவு செய்து, அதன் கீழே மணலில் தனது பெயரை ஆங்கிலத்தில் எழுதினார்.

அப்போது, Chris Hemsworth பெயர் எனும் ஸ்பெல்லிங்கில் T என்ற எழுத்தை விட்டுவிட்டு Chris Hemsworh என அவசர அவசரமாக அவர் எழுதியதை நோட் செய்த நக்கீர நெட்டிசன்கள், அதனை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துக்கு அனுப்பியுள்ளனர்.

மேலும், இணையத்தில் அந்த புகைப்படங்களை பகிர்ந்து, ட்ரோல் செய்தும் வருகின்றனர். ஆனால், அயன்மேன் நடிகர் ராபர்ட் டவுனி ஜூனியர், புத்திசாலித் தனமாக RDJ என்ற பெயர் சுருக்கத்தை எழுதி சென்றுள்ளார்.

அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படம் நாளை உலகமுழுவதும் ரிலீசாவது குறிப்பிடத்தக்கது.

தளபதி 63 படப்பிடிப்பில் விபத்தில் சிக்கிய நபருக்கு விஜய் கொடுத்த 'ஷாக்'

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

மேலும் செய்திகள்