என்ஜிகே ட்ரெய்லர் எத்தனை மணிக்கு ரிலீஸ் தெரியுமா?

NGK trailer release time announced

by Mari S, Apr 29, 2019, 11:31 AM IST

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள என்ஜிகே படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 7.30 மணிக்கு வெளியாகும் என படத் தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர்ஸ் தற்போது ட்விட்டரில் அறிவித்துள்ளது.

சூர்யா, ரகுல் ப்ரீத் சிங், சாய்பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள என்ஜிகே படம் கடந்த தீபாவளிக்கு சர்கார் படத்துக்கு போட்டியாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட படம். தீபாவளி, பொங்கல் முடிந்து மே 1ம் தேதியும் வரப் போகிறது. இதுவரை படம் வெளியாகவில்லை.

கடந்த ஆண்டு பொங்கலுக்கு சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் வெளியானது. ஆனால், அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

ஒரு ஆண்டுகாலமாக சூர்யாவின் அடுத்த பட அப்டேட் ஏதும் வராமல் அப்செட்டில் இருந்த சூர்யா ரசிகர்களுக்கு, சமீபத்தில் வெளியான என்ஜிகே படத்தின் டீஸர், தண்டல்காரன் பாடல் மற்றும் காப்பான் பட டீஸர், அசுரரை போற்று ஃபர்ஸ்ட் லுக், சிறுத்தை சிவாவுடன் ஒரு படம் என அடுத்தடுத்த அப்டேட்கள் கொடுத்து மீண்டும் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ள சூர்யா, இன்று மாலை 7.30 மணிக்கு வெளியாகவுள்ள என்ஜிகே ட்ரெய்லரின் மூலம் மேலும் உற்சாகத்தை அளிக்க உள்ளார்.

மேலும், இன்றைய தினமே என்ஜிகே படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவும் நடக்கவுள்ளது குறிபிடத்தக்கது.

என்ஜிகே ட்ரெய்லரை ட்ரெண்டிங்கில் கொண்டு வர சூர்யா ரசிகர்கள் இணையத்தில் தீயாய் வேலை செய்து கொண்டு இருக்கின்றனர்.

அண்ணியுடன் த்ரில் அனுபவம்... மகிழ்ச்சியுடன் பகிர்ந்த நடிகர் கார்த்தி

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை