துணிச்சலாக இருங்கள் பெண்களே..இதெல்லாம் நடக்கும் - நீண்ட நாட்களுக்கு பிறகு வெளிச்சத்துக்கு வந்த சமீரா ரெட்டி

Advertisement

சூர்யாவின் வாரணம் ஆயிரம் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தவர் சமீரா ரெட்டி. அஜித்தின் அசல், விஷாலின் வெடி, மாதவனின் வேட்டை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பின்னர் 2014-ம் ஆண்டு, தொழிலதிபர் ஒருவரை மணந்துகொண்டு திரைத் துறையிலிருந்து ஒதுங்கி இருந்தார். திருமணத்திற்கு பிறகு நடிப்பை நிறுத்திவிட்டார். அவருக்கு நான்கு வயதில் ஹன்ஸ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சமீரா இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார். இதுகுறித்து தனது வலைதள பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளதாவது, ``நான் திருமணமாகி இரண்டு மாதங்களில் கர்ப்பமாகிவிட்டேன். பிரசவம் முடிந்த பிறகு மீண்டும் நடிக்க வருவது என்று திட்டமிட்டேன். ஆனால் எல்லாம் நேர் எதிராகிவிடட்டது. கர்ப்ப காலம் எனக்கு மிகவும் கடினமாக இருந்தது.

என் குழந்தை பிறந்த சமயத்தில், நான் 102 கிலோ உடல் எடையில் இருந்தேன். என்னுடைய உடல் எடை பற்றி வெளியே சொல்ல எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. உடல் எடை அதிகரித்தபோது, உண்மையில் என் தன்னம்பிக்கையை இழந்துவிட்டேன். குழந்தை பிறந்த ஓராண்டுக்குப் பின்னரும்கூட என்னால் உடல் எடையைக் குறைக்க முடியவில்லை. எனக்கே என்னை அடையாளம் தெரியவில்லை. நான் வெளியே சென்றபோது என்னை பார்த்தவர்கள், சமீரா ரெட்டியா இது, என்ன ஆச்சு என்று வியந்தனர்.

உடல் எடை அதிகரித்துக்கு காரணம் முதல் முறை கர்ப்பமாக இருந்தபோது ஏற்பட்ட பிரச்சினையால் 4 முதல் 5 மாதங்கள் படுக்கையில் இருந்தேன். அதனால் உடல் எடை ஏற தொடங்கியது. படங்கள், விருது விழாக்கள் என்று பிசியாக இருந்த எனக்கு படுத்த படுக்கையாக இருந்தது கஷ்டமாக இருந்தது. எனக்கு நானே ஊக்கம் கொடுத்துக்கொண்டு உடற்பயிற்சி, யோகா என பயிற்சிகள் மூலம் தற்போது என்னுடைய உடல் எடையைக் குறைத்துள்ளேன். நான் இந்தப் பதிவை பெண்களுக்காகப் பதிவிடுகிறேன். மகப்பேறு காலத்தில் ஹார்மோன் மாற்றம், மனநிலை மாற்றம் போன்ற காரணங்களால் உடல் எடை அதிகரிக்கிறோம். துணிச்சலாக இருங்கள்'' எனப் பதிவிட்டு, பெண்களை ஊக்கப்படுத்தியுள்ளார்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
/body>