நடிகர் விஷால் எந்த இயக்குநருடன் அடுத்து நடிக்கப்போகிறார் என்பதே திரையுலகில் பலரின் கேள்வி.
விஷால் நடிப்பில் வரும் மே 10ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் அயோக்யா. தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் வெளியான டெம்பர் படத்தின் தமிழ் ரீமேக். விஷால் பெரிதும் எதிர்பார்க்கும் படம் இந்த அயோக்யா.
தற்பொழுது விஷால் சுந்தர்.சி. இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கூட துருக்கியில் நடந்துவருகிறது. இந்நிலையில், இப்படத்தை முடித்துவிட்டு மிஷ்கின் இயக்கத்தில் துப்பறிவாளன் 2 படத்தில் நடிக்கவிருக்கிறார் என்கிற செய்திகள் பரவ தொடங்கியது. விஷாலும் அந்த எண்ணத்தில் தான் இருந்தாராம். ஆனால் திடீரென தன்னுடைய முடிவை மாற்றியிருக்கிறார்.
சுந்தர்.சி. படத்தை முடித்த கையோடு கெளதம் மேனன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் விஷால். சின்னத்தம்பி உள்பட சில படங்களை தயாரித்த கே.பி.பிலிம்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கவிருக்கிறது. விஷாலின் இந்த முடிவு மிஷ்கினையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது என்று சொல்லப்படுகிறது. விஷாலின் திடீர் மாற்றம் பலரையும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.