சத்யம் சினிமாஸின் அடுத்த அவதாரம் என்ன தெரியுமா

பிரபல திரையரங்க நிறுவனமான சத்யம் சினிமாஸ் நிறுவனத்தின் அடுத்த கட்டம் என்ன தெரியுமா?

sasikumar

இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் தற்பொழுது படம் ஒன்றை நடித்துவருகிறார். ரஜினி முருகன், வருத்தபடாத வாலிபர் சங்கம், சீமராஜா என தொடர் வெற்றியை கொடுத்த பொன்ராமுடன் கூட்டணி சேர்ந்திருக்கிறார் சசிகுமார் என்று தான் சொல்லவேண்டும். இப்படத்தின் படப்பிடிப்பு நடந்துவருகிறது.

படத்தில் முக்கிய கேரக்டரில் மூத்த நடிகரான ராஜ்கிரண் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. ஏற்கெனவே பொன்ராம் இயக்கத்தில் வெளியான ரஜினிமுருகன் படத்தில் ராஜ்கிரண் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தின் வேலைகள் பிஸியாக போய்வந்தாலும் யார் படத்தை தயாரிக்கிறார் என்பது நீண்ட நாட்களாகவே சஸ்பென்ஸாக இருந்தது. இறுதியாக தீர்வும் கிடைத்துள்ளது. பொன்ராம் - சசிகுமார் கூட்டணியில் உருவாகிவரும் படத்தை சத்யம் சினிமாஸ் நிறுவனம் தான் தயாரிக்கிறது.

சென்னையின் பிரபல திரையரங்கமானது சத்யம் சினிமாஸ். இந்த திரையரங்கை பிவிஆர் நிறுவனம் வாங்கிவிட்டது. ஆனாலும் நிர்வாகத்தை சத்யம் சினிமாஸ் நிறுவனமே கவனித்துவருகிறது. இனி திரையரங்குகளில் பணத்தைப் போடுவதை விட, திரைப்படங்களில் போட முடிவெடுத்திருக்கிறது சத்யம் குழுமம். தயாரிப்பு நிறுவனமாக களத்தில் இறங்கும் சத்யமின் முதல் படம் சசிகுமாருடையது என்பது குறிப்பிடத்தக்கது. சத்யம் நிறுவனம் எதில் கால்பதித்தாலும் ஹிட்டோ ஹிட் ரகம் தான். திரையுலகில் ஜொலிப்பார்களா என்பதை பார்க்கலாம்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds