வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கும் படத்தின் படப்பிடிப்பு மே மாதம் துவங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சிம்புவுக்கு இந்த வருட ஒபனிங் சுந்தர்.சி. இயக்கத்தில் வெளியான வந்தா ராஜாவா தான் வருவேன். இப்படம் சிம்புவுக்கு எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. இப்படத்துக்குப் பிறகு, மார்ச் முதல் மாதமே வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்கவிருந்தார் சிம்பு. ஆனால் உடல் பருமன் காரணமாக படப்பிடிப்பு தொடங்கவில்லை. வெளிநாட்டுக்கு சென்று உடல் எடையை கணிசமாக குறைத்துவிட்டு நாடு திரும்பியிருக்கார் சிம்பு. முதல் கட்டமாக அவரின் சகோதரர் குரலறசனின் திருமணத்தில் கலந்துகொண்டுள்ளார்.
இந்நிலையில், வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கும் மாநாடு படத்தின் படப்பிடிப்பு மே மாதம் துவங்க இருக்கிறது. படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கவிருக்கிறார். இவர் இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தை வி ஹவுஸ் புரொடக்ஷன் நிறுவனம் சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரிக்கவிருக்கிறார்.
வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தில் சிம்புவின் உடல் எடை இணையத்தில் மீம்களாக பறந்தது. ஒரு நடிகருக்கான எந்த உடற்கட்டும் இல்லாமல் இருக்கிறார் சிம்பு என்று நேரடியாகவே சிம்பு மீது குற்றம் சாட்டப்பட்டது. இதனால் வெறியான சிம்பு, வெறிகொண்டு உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறித்துவிட்டார். படத்தின் கதைக்கும் சிம்பு ஃபிட்டாக இருந்தாக வேண்டுமாம். ஆக, எல்லாம் கைகூடி வந்துவிட்டதால் மே ஷூட்டிங் உறுதி என்பதையும் வெங்கட்பிரபு ட்விட்டரில் உறுதி செய்திருக்கிறார்.
ஒருவழியாக தொடங்கும் சிம்புவின் மாநாடு
Advertisement