எழுத்துக்காக எந்த எண்ட் வேணும்னாலும் போகலாமா? கே13 விமர்சனம்!

K13 Movie Review

by Mari S, May 3, 2019, 14:19 PM IST

ஆறாது சினம், டிமாண்டி காலனி பட வரிசையில் அருள்நிதி மற்றுமொரு வித்தியாசமான கதையை தேர்வு செய்து நடித்திருக்கும் படம் தான் கே13. சரி படம் எப்படி இருக்குன்னு பார்ப்போமா?

எஸ்.பி. சினிமாஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் பரத் நீலகண்டன் இயக்கத்தில் இன்று வெளியாகி இருக்கும் படம் தான் கே13.

13 நம்பர் வீடு, 13பி படங்களை தொடர்ந்து இன்னொரு 13ம் நம்பரை வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் கே13. ஆனால், அந்த படங்களை போல இது பேய் படம் இல்லை. ஆனா, சரியான சைலன்ஸ் த்ரில்லர் படம் தான்.

அருள்நிதி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் இந்த ரெண்டு பேரும் தான் படத்தை மொத்தமா தாங்கி நிக்கிறாங்க. அருள்நிதியோட பிரெண்ட் கதாபாத்திரத்தில் வரும் காக்காமுட்டை மணிகண்டன், எருமை சாணி விஜய் ஒரு சில காட்சிகளுக்கும், கொரியர் பாயாக யோகிபாபு ஒரே ஒரு காட்சிக்கும், அந்த சீன்ல ஜாங்கிரி மதுமிதா சம்பந்தமே இல்லாம சில நொடி காட்சிகளுக்கும் வந்து போறாங்க.

ஷ்ரத்தா ஸ்ரீநாத்தின் தோழியாக வரும் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பட நாயகி காயத்ரி மற்றும் காயத்ரியோட ஹஸ்பண்டா வர நம்ம திரிஷா இல்லன்னா நயன்தாரா பட டைரக்டர் ஆதிக் ரவிச்சந்திரன் வர காட்சிகள் படத்திற்கு திருப்புமுனையாகவும், நாயகி ஷ்ரத்தா ஏன் இப்படி செஞ்சாங்க என்கிற கேள்விக்கு விடையாகவும் இருக்கு.

கதை எழுதுறவங்க நம்மளடோ நண்பர்களா இருந்தா, அவங்ககிட்ட நம்ம சொந்த கதையையோ சோக கதையையோ சொல்லக் கூடாது என்பதற்கு இந்த படம் பெரிய உதாரணமா இருக்கு..

அடுத்து அவங்க எழுதுற கதையில நம்ம வண்டவாளம் தண்டவாளம் ஏறிடும்.

கதைக்காக எந்த எண்டுக்கு வேணும்னாலும், ஒரு பெண் எழுத்தாளர் செல்வாங்களான்னா.. சிந்திக்க வைக்கிறது படம்.

ஷ்ரத்தா ஏன் சாகுறாங்க, அருள்நிதியை எதுக்காக தன்னோட சாவுல கோத்து விடுறாங்க.. அவங்க அருள்நிதிக்கு இப்படியா உதவி பண்ணணும்னு பல கேள்விகளுடன் கிளைமேக்ஸை நோக்கி செல்லும் ரசிகர்களுக்கு கடைசி ரெண்டு நிமிட ட்விஸ்ட்டில் இயக்குநர் பரத் நீலகண்டன் அப்ளாஸ் அள்ளுகிறார்.

சாம் சி.எஸ் வயலின் இசை ஒரு த்ரில்லர் படத்துக்கு இப்படிதான் மீயூசிக் போடணும்னு மியூசிக் டியுசன் நடத்துகிறது. ஜி.கே. விஷ்ணுவின் ஒளிப்பதிவு மற்றும் ரூபனின் சாதுர்யமான கட்ஸ், ஒரே அறையில் கதை நகர்ந்தாலும், போர் அடிக்க விடாமல் கதைக்குள் நம்மை அழைத்துச் செல்லும் விதம் ஆசம்.

நல்ல திரைக்கதை ஜெயிக்கும்னு சொல்லுவாங்க.. ஆனா, நல்ல திரைக்கதை கல்லா கட்டுமான்னு யாரும் சொல்லமாட்டங்க.. இந்த படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றால், இதுபோல பல நல்ல படங்கள் தமிழ் சினிமாவுக்கு கிடைக்கும்.

சினி ரேட்டிங்: 3.25/5.

‘மகிழ்ச்சியை பகிர எனக்காக யாருமே இல்லை...!’ –விவேக் வேதனை

You'r reading எழுத்துக்காக எந்த எண்ட் வேணும்னாலும் போகலாமா? கே13 விமர்சனம்! Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை