சென்னையில் நடைபெறவுள்ள சிறப்பு குழந்தைகளுக்கான கால்பந்து போட்டிக்கு விளம்பரத் தூதராக வரலட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார்.
சிறப்பு குழந்தைகளுக்கான கால்பந்து போட்டி வரும் ஆகஸ்ட் 3ம் தேதி சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு மைதானத்தில் தொடங்குகிறது. ஆகஸ்ட் 6ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில் 20க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த சிறப்பு குழந்தைகள் பங்கேற்க உள்ளனர். இது தொடர்பாக அதன் ஏற்பாட்டாளரான special Olympic அமைப்பு சார்பில் சென்னை தி.நகரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நடிகை வரலட்சுமி பங்கேற்றார். அவரை செய்தியாளர்கள் பயங்கர கோவப்படுத்திவிட்டனர்.
ஆசிய தடகள போட்டியில் பதக்கம் வென்ற கோமதி மாரிமுத்து பற்றி செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். ``கோமதியை நினைத்து பெருமையாக உள்ளது’’ என்று பதிலளித்தார்.
``பொருளாதாரத்தில் பிந்தங்கிய கோமதி வெற்றிபெற்ற பின்னர் அவரை பாராட்டுகிறீர்கள். ஆனால் இதுபோன்ற மாணவர்களை முன்னரே கண்டறிந்து ஏன் உதவுவதில்லை?’’ என்னும் கேள்வியை செய்தியாளர் ஒருவர் வரலட்சுமியிடம் முன்வைத்தார். அதற்கு பதிலளித்த வரலட்சுமி ‘’நீங்க மீடியாவில் இருக்கீங்க. நீங்களே கோமதி வெற்றி பெற்ற பிறகுதான் அவரை பற்றி தலைப்பு செய்தி போடுறீங்க. அதற்கு முன்னாடி ஏன் அவர்களை போன்றவர்களை கண்டுபிடித்து செய்தி போடுவதில்லை. அப்படி செய்தால் கிராப்புறத்தில் இருக்கும் மாணவர்களின் திறமை வெளி உலகத்துக்கு தெரிய வரும். எனவே என்னை கேட்பதை விட்டுவிட்டு முதலில் நீங்கள் அதை செய்யுங்கள்’’ என்று பதிலடி கொடுத்துவிட்டார் வரலட்சுமி.
``கோமதியை சந்தித்து என்ன உதவி செஞ்சீங்க?’’ என்று வரலட்சுமியிடம் மீண்டும் ஒரு நிருபர் கேள்வி எழுப்பினர். அதற்கு சற்று யோசிக்காமல் பதில் அளித்த வரலட்சுமி, ``இனிமே தான் செய்யணும். சரிஒ என்ன கேட்குறீங்களே நீங்க என்ன உதவி செஞ்சீங்க.. என்ன இன்னும் செய்யலையா? அப்புறம் ஏன் என்னை மட்டும் கேட்குறீங்க” என்று கலாய்த்துவிட்டு சென்றார்.