அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் ரிலீசாகி 10 நாட்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில், மார்வெல் தயாரிப்பில் வரும் ஜூலை 2ம் தேதி ரிலீசாகவுள்ள ஸ்பைடர்மேன் ஃபார் ஃப்ரம் ஹோம் படத்தில் எண்ட்கேம் குறித்த மிகப்பெரிய ஸ்பாய்லரை ஸ்பைடர்மேன் புதிய டிரைலர் லீக் செய்து விட்டது.
அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படம் உலகமுழுவதும் ஏப்ரல் 26ம் தேதி வெளியாகி இதுவரை 20 ஆயிரம் கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது. இந்நிலையில், மார்வெல் தயாரிப்பின் அடுத்த ரிலீஸ் படமான ஸ்பைடர்மேன் ஃபார் ஃப்ரம் ஹோம் படத்தின் புதிய டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த டிரைலர் காண்பிக்கும் முன்னதாக ஸ்பைடர் மேன் நடிகர் டாம் ஹாலண்ட், எண்ட்கேம் படத்தை பார்க்காதவர்கள், இதற்கு மேல் இந்த டிரைலரை பார்க்க வேண்டாம் என ஸ்பாய்லர் அலர்ட் கொடுத்துவிட்டு டிரைலரை ஆரம்பிக்கிறார்.
எண்ட்கேமில் அயன்மேன் இறந்துவிட்ட நிலையில், அயன்மேன் இல்லாமல் ஸ்பைடர்மேன் படும் கஷ்டங்கள் குறித்தும், இந்த உலகத்திற்கு இன்னொரு அயன்மேன் தேவை என வசனம் பேசும் இடங்கள் என டாம் ஹாலண்ட் பல இடங்களில் ஸ்கோர் செய்கிறார்.
என்னடா மார்வெல் டீமே இப்படி ஸ்பாய்லர் பண்ணிடுச்சேன்னு பல பேர் புலம்பி வந்தாலும், 20 ஆயிரம் கோடிக்கு மேல் வசூலை ஈட்டி விட்டதாலும், முன்னதாகவே பல பத்திரிகைகளும், விமர்சகர்களும் அயன்மேன் இறந்ததை போட்டு உடைத்ததாலும், இந்த ரிவீல் எண்ட்கேம் வசூலை பாதிக்காது என்ற ரீதியிலே படக்குழுவினர் இப்படியொரு டிரைலரை வெளியிட்டு, மீண்டும் டோனி ஸ்டார்க்கை ஒரு காட்சியிலாவது ஸ்பைடர்மேன் படத்தில் காட்ட மாட்டார்களா என்ற ஆர்வத்தை தூண்டியுள்ளனர்.