ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா 3 வசூல் நிலவரம் கோலிவுட்டையே பிரம்மிக்க வைக்கிறது.
சன்
பிக்சர்ஸ் தயாரிப்பில் முனி படத்தின் நான்காம் பாகமும், காஞ்சனா படத்தின் மூன்றாம் பாகமுமான காஞ்சனா 3 கடந்த சில வாரத்துக்கு முன்பு வெளியானது. ராகவா லாரன்ஸ் இயக்கி, தயாரித்து இப்படத்தில் நடிக்கவும் செய்திருந்தார்.
படத்தில் ஓவியா, வேதிகா மற்றும் நிக்கி என மூன்று நாயகிகள் நடித்திருந்தனர். காஞ்சனா படங்களின் அதே பேய் கதை, அதே செண்டிமெண்ட், அதே காமெடி என வழக்கமான காஞ்சனா சீரியஸ் மாதிரி தான் இருந்தது. அதனால் காஞ்சனா படம் பரவலாக கிண்டலுக்கு உள்ளானது.
கோடை விடுமுறையில் வெளியானதால் படத்துக்கு மக்கள் கூட்டமாக சென்று பார்த்து ரசித்துள்ளனர். சுமாரான கதைக் களம் தான் என்றாலும் பெரிய அளவுக்கு வசூலையும் ஈட்டியுள்ளது. ரிலீஸாகி கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் தயாரிப்பு தரப்புக்கு மட்டும் சுமார் நாற்பது கோடி வரை வசூலாகியுள்ளது.
பொதுவாக ரஜினி, விஜய் படங்களுக்கு மட்டுமே இந்த மாதிரியான அசூர வசூல் வரும். அதுவும் படம் நன்றாக இருந்து, ஓடினால் மட்டுமே சாத்தியம். அப்படியான ஒன்றை ராகவா லாரன்ஸ் சாத்தியப்படுத்தியிருக்கிறார். இதனால் கோலிவுட்டினர் ஆச்சரியத்தில் வியந்துள்ளனர்.
காஞ்சனா 3 வசூல்! ஆச்சரியமோ ஆச்சரியம்
Advertisement